சென்னை: சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு டெல்லி சென்றடைந்த முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழ்நாட்டிற்கான நிலுவை நிதியை விடுவிக்க வலியுறுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.
திமுக சார்பில் பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி பவள விழா கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக திமுக தொண்டர்களின் அழைப்பு கடிதத்தில், தான் செப்டம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் தமிழ்நாட்டின் நிதியைக் கேட்டு பெற இரண்டு நாட்கள் பிரதமரை சந்திக்க டெல்லி செல்ல இருக்கிறேன் எனக் கூறியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். அதேபோல் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கல்வி மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி தொடர்பாக விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்த இருக்கிறேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் மு க ஸ்டாலின் இரவு டெல்லி வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் எம்பி டிஆர் பாலு, ஏ கே எஸ் விஜயன் உள்ளிட்டோர் முதல்வர் மு க ஸ்டாலினை வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின். அப்போது பள்ளிக்கல்வி திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும், இரண்டாம் கட்ட மெட்ரோவுக்கான நிலுவையில் உள்ள நிதியை விடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முதல்வர் வலியுறுத்த இருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}