சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து நேற்று முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வட தமிழ்நாட்டை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 16ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி
மாலை 4 மணிக்குள் கனமழை பெய்யும் மாவட்டங்கள்:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி, ஆகிய 13 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணிக்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
இன்று மிக கனமழை:
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்பதால் சென்னை உட்பட மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று கனமழை:
ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கன மழை:
சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம்,தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய 12 மாவட்டங்களுக்கு நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள்:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல்,மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய 27 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 15ஆம் தேதி:
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை தேனி திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 16ஆம் தேதி:
கோவை, நீலகிரி, தேனி ,திண்டுக்கல், திருப்பூர், ஆகிய ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Work from Home: நவீன வாழ்வியலின் வரப்பிரசாதம்.. ஆனால் அதன் அருமை பலருக்குப் புரியலையே!
நேபாள பேரிடருக்கு நிலநடுக்கம் அல்ல.. பனிப்பாறை சரிவே பேரழிவிற்குக் காரணம்: அமெரிக்கா
வெயிலும் கொஞ்சம் மூடும் போது மயிலும் வந்து ஆடும்!
சிந்தனைச் சிதறல்.. அச்சத்தைக் களையாமல் உயர் உச்சத்தைத் தொட முடியாது!
திருமண நாள் வாழ்த்து.. ஒரு மணமகளின் வாழ்த்துரை
தேனமுதுக் குரலே தென்னங் காற்றே!
சேலம் மாநகரில் களைக்கட்டும் ஸ்ரீ ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக திருவிழா
சூரிய சந்திரன்!
காரட் ஹல்வா
{{comments.comment}}