சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதத்தில் மிதமான மழையாகத் தொடங்கி, பின்னர் வங்கக் கடலில் உருவான புயல் மற்றும் காற்று சுழற்சி காரணமாக நவம்பர் மாதத்தில் தீவிரமடைந்தது.இதனால் மாநில முழுவதும் கன முதல் அதிக கன மழை வரை கொட்டி தீர்த்தது. இதையடுத்து டிசம்பர் மாத தொடக்கத்தில் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது.
நேற்று பல்வேறு பகுதிகளில் காலையில் பனிமூட்டம் நிலவி வந்தாலும் மாலை இரவு நேரங்களில் நல்ல மழை பெய்துள்ளது. தேனி, திருச்சி, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மதுரையில் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பை விட கூடுதலாக 34 சதவீதம் பெய்துள்ளது. வரும் நாட்களில் மழை தொடர இருப்பதால் வடகிழக்கு பருவ மழை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து அதே இடத்தில் நிலவி வருகிறது. இது வட தமிழ்நாடு -ஆந்திர கடற்கரையை நோக்கி நாளை நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக விழுப்புரம், கடலூர்,செங்கல்பட்டு, மாவட்டங்களில் இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வங்க கடல் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் இரண்டு நாட்களுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் மத்திய வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வரும் நிலையில் திடீரென காற்றுடன் மழை பெய்ய கூடும் என்ற எச்சரிக்கையை அடுத்து சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், ஆகிய ஏழு துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஒற்றைக் கொம்போனே.. ஓர்கணிக்கு அம்மையப்பனை சுற்றி வந்து பெற்றவனே!
எலிகள் செய்யும் பூஜை.. விநாயகரின் செம டான்ஸ்.. ஏஐயில் கலக்கும் பிள்ளையார் வீடியோக்கள்!
காதலிப்பதாக இருந்தால்.. இதயம் முரளி மாதிரி இருக்காதீங்க.. சீனத்து லியூ போல போட்டு உடைச்சிருங்க!
பிள்ளையாரை வழிபட சிறந்த நைவேத்தியங்கள் என்னென்ன.. விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்
அன்புள்ள அம்மா.. அருமையான அப்பா!
ஜம்மு காஷ்மீரை உலுக்கி எடுத்த கன மழை.. வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் சென்ற 5 பக்தர்கள் பலி
தமிழ்நாட்டில் நாளை முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
விஜய் வேஷம் கலைந்து விட்டது... விரைவில் காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார்: அமைச்சர் சேகர்பாபு
திமுக-அதிமுக...எத்தனை இடங்களில் போட்டியிட்டால்.. கூட்டணி ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்கலாம்?
{{comments.comment}}