சென்னை: வங்கக்கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும் என்பதால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் மாறி மாறி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மழையின் அளவு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட மூன்று சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் மழை அதிகரித்தால் இன்னும் நமக்கு கூடுதலான பருவ மழைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்த பருவ மழைகள் பேருதவியாக இருக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும் தற்போது தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழை பெய்து வரும் நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகர இருப்பதால் மழையின் தீவிரம் அதிகரித்து கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இன்று கனமழை:
இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று மிக கனமழை:
கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென் தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா பகுதிகள் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும். 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் மீனவர்கள் இன்று முதல் 28ஆம் தேதி வரை மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
{{comments.comment}}