தென் மாவட்டங்களில் இன்று கனமழை தொடரும்.. மிதக்கும் நெல்லை.. அதிகன மழைக்கான.. ரெட் அலர்ட்!

Dec 13, 2024,04:19 PM IST

சென்னை: தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுயிழக்க உள்ள நிலையில் நெல்லையில் இன்று அதிக கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


ஏற்கனவே தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் நகருக்குள் வெள்ளும் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.


தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கில் நகர்ந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வருகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் தென் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வலுவிழக்கக்கூடும். மேலும் வங்கக்கடலில் டிசம்பர் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நாளை வளிமண்டல கீழடுக்கு சுழச்சியாக உருவாகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற இருக்கிறது. 


மீண்டும் மிதக்கும் நெல்லை.. பொங்கி வரும் தாமிரபரணி




தொடர் மழை காரணமாக, நெல்லை கடந்த ஆண்டு பெரு வெள்ளத்தை சந்தித்தபோது என்ன மாதிரியான பாதிப்பு வந்ததோ கிட்டத்தட்ட அதே அளவிலான பாதிப்பை இந்த முறையும் சந்திகக் ஆரம்பித்துள்ளது. தொடர் மழை காரணமாக நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலைக்குப் போயுள்ளன.


தொடர் கன மழையால் நெல்லையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. பார்க்கவே கடல் போல காட்சி தருகிறது தாமிரபரணி. பல இடங்களில் ஊருக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. ஜங்ஷன் பகுதியில் பல கடைகளுக்குள் ஆற்று நீர் வெள்ளம் போல புகுந்து வியாபாரிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜங்ஷன் பகுதியில் கடைகளுக்குள் புகுந்த வெள்ளம்




கடைகளுக்குள் வெள்ள நீர் முழங்கால் அளவுக்குப் புகுந்துள்ளதால் பல கடைகளில் பெரும் அளவிலான பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீரை வெளியேற்றவும் முடியாத நிலை தற்போது நிலவுகிறது. காரணம் வெளியில் தண்ணீர் வடிந்தால் மட்டுமே கடைகளுக்குள் புகுந்த நீர் வெளியேற முடியும் என்பதால் வர்த்தகர்கள் செய்வதறியாமல் திகைத்து உள்ளனர்.


இதற்கிடையே, சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக மிக தீவிரமாக உள்ளது. ஒரே நாளில் பரவலாக மழை பெய்ததால்  மழை அளவு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டுக்கான இயல்பான வடகிழக்கு பருவமழை 40 சென்டிமீட்டர் என்ற நிலையில் இந்த ஆண்டு 54 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.  தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை இயல்பை விட 32 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. 


நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி நகர்வதால் வடகடலோர மாவட்டங்களில் 17, 18 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையிலும் கன மழைக்கான வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியின் அடுத்தடுத்த நகர்வுகள் பொருத்தே சென்னை மழை அளவு கணிக்க முடியும் என அவர் அறிவித்துள்ளார்.


இன்று அதிக கன மழை:




நெல்லை மாவட்டத்தில் இன்று அதி கன மழை பெய்யக்கூடும் என்பதால் நெல்லை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.


இன்று மிக கனமழை ஆரஞ்சு அலர்ட் 




கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர்,ஆகிய ஒன்பது மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இன்று கனமழை: 


நீலகிரி,கோவை, திருப்பூர்,திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா: ஆனந்த் அறிவிப்பு

news

ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை...இன்று முக்கிய முடிவை அறிவிக்க வாய்ப்பு

news

கொலம்பியா எல்லையில் விபத்துக்குள்ளான விமானம்.. எம்.பி உள்பட 15 பேர் பலி

news

பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?

news

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்த தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்காயாளர்கள்!

news

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்

news

எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?

அதிகம் பார்க்கும் செய்திகள்