சென்னை: வங்கக் கடலில் உருவான காற்று சுழற்சி தமிழ்நாடு மற்றும் இலங்கையை நோக்கி நகரக்கூடும் என்பதால் தமிழகத்திற்கு மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் உருவாகும் காற்று சுழற்சிகளின் காரணமாக பருவ மழை தீவிரமடைந்து பரவலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது. மறுபக்கம் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருச்செந்தூர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட பல பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்து போக்குவரத்திற்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் அநேக இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் தீவுகளை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழ்நாடு மற்றும் இலங்கையை நோக்கி நகரக்கூடும். இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளது.இதன் பின்னர் அடுத்த இரண்டு தினங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையொட்டி பருவமழையை எதிர்கொள்ள தேசிய, மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தலா 15 பேர் கொண்ட குழுக்கள் தயாராக உள்ளன. மண்டல அளவிலான நிவாரண குழுக்கள் நியமிக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ரசிகர்களே.. உங்களது அன்புக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையே இல்லை.. அஜீத் குமார்நெகிழ்ச்சி!
ஈரோடு கிழக்கில் களம் காணும் ஆசிரியை சீதாலட்சுமி.. வேட்பாளரை அறிவித்தார் சீமான்.. 2வது முறையாக போட்டி
இயற்பெயர்களுக்கு திரும்பும் முன்னணி நடிகர்கள்... தமிழ் சினிமாவின் புதிய டிரெண்ட்.. அப்போ ரஜினி?
தமிழ்நாடு முழுவதும் களை கட்டிய பொங்கல் திருநாள்.. வீடுகள் தோறும் Happy Pongalo Pongal!
சீறிப் பாயும் காளைகள்.. விறுவிறு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. பொங்கல் நாளில் கோலாகலம்!
பொங்கல் பண்டிகை 2025 : தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்.. நோட் பண்ணிக்குங்க!
மகிழ்ச்சி பொங்கட்டும்.. நல்லிணக்கம் வளரட்டும்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பொங்கல் வைக்கும் நேரத்தில் நாளை மழை பெய்யுமா.. என்ன சொல்கிறது வானிலை மையம்?
மாடு பிடிமாடு.. அதிகமாக பிடிச்சது யாரு.. இந்தா பிடி காரு.. களைகட்டப் போகும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
{{comments.comment}}