சென்னை: சென்னையில் இன்று இரவும், நாளை இரவும் பரவலாக நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருந்த நிலையில் சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் மாலையில் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை நகர் முழுவதும் பலத்த காற்றுடன் திடீர் கன மழை வெளுத்தெடுத்தது. வானம் கருத்து பலத்த மழை கொட்டியதால் மக்கள் அவதியும் அடைந்தனர். குறிப்பாக விநாயகர் சதுர்த்தி பர்ச்சேஸுக்கு வந்தோர், பல்வேறு ஊர்களுக்குப் போவதற்காக வாகனங்களில் வந்தோர் சிரமத்தைச் சந்தித்தனர்.

சென்னை கடற்கரை, சாந்தோம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, எழும்பூர், சென்னை சென்டிரல் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கன மழை கொட்டித் தீர்த்து விட்டது. அதேபோல புறநகர்கள் பலவற்றிலும் மழை பெய்தது. இதனால் வெளியூர்களுக்குச் செல்லக் கிளம்பிய மக்கள் சற்று அவதியடைந்தனர்.
இதற்கிடையே, இன்று இரவும், நாளை இரவும் சென்னையில் பலத்த மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
தென் மேற்குப் பருவ மழைக் காலத்திலேயே அதிக மழை பெய்த நாட்களை சென்னை மீனம்பாக்கம் பகுதி சந்திக்கப் போகிறது. இன்று இரவும், நாளை இரவும் சென்னையில் பரவலாக நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 10 முதல் 14 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் பரவலாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை இருக்கும். குறிப்பாக வட மாவட்டங்களில் சிறப்பான மழையை எதிர்பார்க்கலாம்.
ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான தென் மேற்குப் பருவமழைக்காலத்தில் இதுவரை தென் சென்னை நல்ல மழையைப் பெற்றுள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் இந்த மழைக்காலத்தால் மீனம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் அதிகபட்சமாக மழை பதிவானது 1996ம் ஆண்டுதான். அப்போது 871 மில்லி மீட்டர் மழை கிடைத்தது. தற்போது இதுவரை 788 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இன்னும் நமக்கு 14 நாட்கள் இருக்கின்றன. எனவே 1996 சாதனையை முறியடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
நுங்கம்பாக்கத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 1996ம் ஆண்டு 1155 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது. இந்த வருடம் இதுவரை 603 மில்லிமீட்டர் மழைதான் பெய்துள்ளது. சாதனை படைக்க வாய்ப்பு குறைவுதான். காவிரி டெல்டா பகுதியில் மழை பற்றாக்குறை குறை விரைவில் தீரும்.
இன்று இரவு பெய்யப் போகும் மழையை என்ஜாய் பண்ணத் தயாராவோம் என்று கூறியுள்ளார் வெதர்மேன்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}