சென்னை: தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகதனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாட்டில் வறண்ட வானிலையும், வெயிலின் தாக்கமும் அதிகரித்தால் மக்கள் வெயிலை சமாளிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் வெயிலுக்கு இதமாக குல்பி சாப்பிட்டா எப்படி இருக்கும். அது மாதிரி அடிக்கிற வெயில்ல மக்களை குளிர்விக்க தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யுமாம்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் அடுத்த நான்கு நாட்களுக்கு நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாம்.
சென்னையைப் பொருத்தவரை, சென்னையில் ஏப்ரல் மாதத்தில் மழைக்கு வாய்ப்பில்லை எனவும், ஆனால் வெப்பம் கட்டுக்குள் இருக்கும் எனவும் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 15 ஆம் தேதி:
ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிறகு தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}