ஆஹா வரப் போறான்யா.. வரப் போறான்யா.. அடுத்த 5 நாட்களுக்கு.. 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்குமாம்!

May 24, 2024,05:45 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் படிப்படியாக உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவி வந்தது. இதனால் மக்கள் குஷியில் இருந்து வந்தனர். இதற்கிடையே தென்மேற்குப் பருவமழையும் முன்கூட்டியே ஆரம்பமானது. அதனை தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடலிலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் நாளை புயலாக உருவாகிறது. 


இதனால் தமிழக முழுவதும் பரவலாக கன முதல் மிக கனமழை வரையிலும், ஒரு சில இடங்களில் இதுவரை வரலாற்றில்  இல்லாத அளவுக்கு மழை பொழிவும் இருந்து வந்தது. மேலும் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னத்தால் தமிழ்நாட்டில் மழை அளவு குறைந்து வெப்பம் படிப்படியாக உயரும் என ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்திருந்தார்.




இந்த நிலையில் மீண்டும் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால்  மீண்டும் வெயிலா என மக்கள் அயர்ச்சி அடைந்துள்ளனர்.


தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும். சென்னையை பொறுத்தவரை 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.


இன்று கனமழை:


நீலகிரி, கோவை,திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்  வானிலை மையம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்