மதுரை: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பழனிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மதுரை டூ பழனி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இக்கோவில் ஈராயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. இக்கோயிலில் உள்ள முருகன் சிலை நவபாஷாணத்தால் ஆனது. வேறு எங்கும் இந்த வகை சிலையை காண முடியாது என்பது இக்கோயிலின் சிறப்பாகும். அதே சமயத்தில் பக்தர்கள் நினைத்தது நிறைவேற கந்தப் பெருமானை வழிபட பழனி மலையை நாடி தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
மார்கழி, தை மாதங்களில் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்ற, பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரை சென்று முருகனை தரிசித்து செல்கின்றனர். இதனால் மார்கழி,தை மாதங்களில் கூட்டம் அலைமோதுவது வழக்கம். குறிப்பாக தை மாதங்களில் வரும் பௌர்ணமி அன்று தைப்பூசம் நாள் முருகனுக்கு உகந்தது. இந்த நன்னாளில் பக்தர்கள் பால்காவடி, பறவை காவடி, பால்குடம், என தங்களின் நேர்த்திக் கடன்களை செலுத்துவார்கள்.
அந்த வகையில் இந்த வருடம் தை 30ஆம் தேதி அதாவது பிப்ரவரி 11-ம் தேதி தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. அதிலும் இந்த வருடம் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை தைப்பூசம் வருவதால் அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தைப்பூசத்தன்று மதுரையிலிருந்து பழனிக்கு பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி பிப்ரவரி 11 மற்றும் 12ஆம் தேதிகளில் மதுரை டூ பழனி (06722) இடையே தைப்பூச சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்டு காலையில் 11:30 மணிக்கு பழனிக்கு சென்றடையும்.
அதேபோல் மறு மார்க்கமாக பழனி டூ மதுரை சிறப்பு ரயில் (06721), பழனியில் இருந்து இருந்து மாலை 3 மணிக்கு புறப்படுகிறது. இந்த தைப்பூச சிறப்பு ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஆகிய வழித்தடங்களில் நின்று செல்லும் என செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை
டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!
அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
துளசி.. திருமாலுக்கு உகந்தது.. ஏன் என்று தெரியுமா?
இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியீடு தேதியை அறிவித்த படக்குழு
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
{{comments.comment}}