கொல்கத்தா: 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் இன்று கோலாகலமாக ஆரம்பமாகிறது.
18வது ஐபிஎல் திருவிழா இன்று முதல் மே 25ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 78 லீக் போட்டிகள் கொண்ட இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்ச்ர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய 10 அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா இன்று மிக பிரம்மாண்டமாக தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று 7:30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில், நடப்புச் சாம்பியன் ஆன கொல்கத்தா நைட் ரைட்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்ச் அணிகள் மோதுகின்றன. இதற்காக இரண்டு அணிகளும் தீவிர பலப்பரீச்சையில் ஈடுபட்டுள்ளனர். இந்த முதல் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உற்சாகமாக வலம் வருகின்றனர்.
முன்னதாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஐபிஎல் திருவிழா கண் கவரும் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக துவங்குகிறது. கொல்கத்தா மட்டுமின்றி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் 13 இடங்களிலும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இதற்கிடையே தெற்கு வங்காளத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதாவது ஐபிஎல் 2025 தொடங்கும் மார்ச் 22 ஆம் தேதி ஆரஞ்சு எச்சரிக்கையும், ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஐபிஎல் தொடரின் போது மழை குறுக்கே வந்து ஆட்டம் தடைப்படுமோ என்ற அச்சமும் நிலவி வருகிறது.
3I/ATLAS.. சூரியனை நோக்கி வரும் மர்மப் பொருள்.. வேற்றுகிரக விண்கலமா.. பூமிக்கு ஆபத்தா?
வரலாற்றுப் பிழை செய்து விட்டார் ஜெயலலிதா.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சால் பரபரப்பு!
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
1967,1977 தேர்தலைப் போல 2026 தேர்தலும் முக்கியமானதாக அமையும்: தவெக தலைவர் விஜய்!
மை டிவிகே... உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்தார்... தவெக தலைவர் விஜய்!
நீதி தவறிய செயலுக்காக முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
ரஷ்யாவில் கடும் நிலநடுக்கம்.. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சுனாமி அலை தாக்குதல்!
கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!
Honeymoon in Shillong: மேகாலயா தேனிலவு கொலை சம்பவம் சினிமா ஆகிறது!
{{comments.comment}}