சென்னை: 2025 -26 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த பட்ஜெட் தாக்கவல் நிகழ்வை, சென்னையில் உள்ள 100 முக்கிய இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
2025 -26 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை காலை 9.30 மணிக்கு தாக்கல் ஆகிறது. இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக பொருளாதார ஆய்வறிக்கையை முதல்முறையாக தாக்கல் செய்ய உள்ளது தமிழ்நாடு அரசு. இதில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், உள்நாட்டு உற்பத்தி, அரசின் நிதிநிலை, போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெறவுள்ளது.
இதனை தொடர்ந்து நாளை மறுநாள் மார்ச் 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். 17 ஆம் தேதி பட்ஜெட் மீதான உறுப்பினர்களின் விவாதம் தொடங்கும். 4 அல்லது 5 நாட்கள் நடைபெறும் இந்த விவாதத்தில் உறுப்பினர்களின் கருத்துக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசுவார். பின்னர், துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்.

இந்த நிலையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக பட்ஜெட் தமிழக மக்களால் உற்று நோக்கப்படுகிறது.
ஏனெனில் தற்போது ஆளும் கட்சியின் ஆட்சிக் காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவடைவதால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு திட்டங்களும் சிறப்பம்சங்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது தமிழக பட்ஜெட்டை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையம், பூங்காக்கள், பேருந்து நிலையம், கடற்கரைகள், உள்ளிட்ட முக்கிய 100 இடங்களில் காலை 9:30 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு சட்டமன்றத்தில் வருகின்ற 14.3.2025 அன்று தாக்கல் செய்யப்படும். தமிழ்நாடு அரசின் 2025- 26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையினை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்ட்ரல் ரயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, அண்ணா நகர் டவர் பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை, பாண்டி பஜார் சாலை, கத்திப்பாரா பூங்கா, பெசண்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, டைட்டில் பார்க் சந்திப்பு, உள்ளிட்ட 100 இடங்களில் 14.3.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் ஒளிபரப்பப்படுகிறது. மேலும் 15.3.2025 சனிக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையும், எல்இடி திரையின் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும்

இதேபோல தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பட்ஜெட் நிகழ்வை பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்இடி திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய அந்தந்த ஊர் நகராட்சி நிர்வாகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.
தவெக தேர்தல் பிரச்சாரக்குழு அறிவிப்பு... 10 பேர் பட்டியல்.. 3வது இடத்தில் கே.ஏ.செங்கோட்டையன்!
விஜய்யால் தான் கரூர் சம்பவம் நடந்தது...டி.கே.எஸ். இளங்கோவன் கடும் விமர்சனம்
பாஜக பொதுக்கூட்ட பேனரில் டிடிவி தினகரன் படம் ...கூட்டணி தகவல் உண்மை தானா?
விஜய்யின் பொங்கல் வாழ்த்து: தமிழகத்தில் மீண்டும் வெடித்த தமிழ்ப் புத்தாண்டு விவாதம்
திருவள்ளுவர் தினம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய நான்கு வாக்குறுதிகள்!
திருவள்ளுவர் தினம்...அனைவரும் திருக்குறள் படிங்க...பிரதமர் மோடி வேண்டுகோள்
தஞ்சை பெரிய கோவிலில் பிரம்மாண்ட கோ-பூஜை: 108 பசுக்களுக்கு வழிபாடு!
சினிமாவை அரசியலாகப் பார்க்காதீர்கள்: தணிக்கைக் குழுவிற்கு வைரமுத்து கோரிக்கை!
சூர்யா முதல் தனுஷ் வரை...டாப் ஹீரோக்கள் படங்களின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்
{{comments.comment}}