நமக்குள் இருக்கும் ரோபோ (Robot)!

Dec 18, 2025,09:53 AM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


நமக்குள் ஒரு ரோபோ இருக்கிறது இதைப்பற்றி நினைத்ததுண்டா? அதை மைண்ட்(Mind)  என்றும் சொல்லலாம்.. நாம் பிறந்தவுடன் வெளி உலக தொடர்பு ஆரம்பித்தவுடன்…மக்களுடன் தொடர்பு கொள்ள ஆரம்பிக்கும் போது இந்த ரோபோ செயல் பட ஆரம்பிக்கிறது..


பிறகு மெதுவாக இந்த ரோபோ நம்மிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொள்கிறது.. இந்த ரோபோ நம் வாழ்க்கைக்கு அத்தியாவசியம் தான்.. ஆனால் பிரச்சனை என்னவென்றால்.. எதை ரோபோ செய்ய வேண்டும்.. எதை நாம் செய்ய வேண்டும் என்ற பிரிவு இல்லாமல் போகும் போது முழுதாக ரோபோ இந்த வாழ்க்கையை நடத்த ஆரம்பிக்கிறது..


ஏதாவது புதிதாக கற்றுக் கொள்ளும் போது நாம் விழிப்பு நிலையில் இருந்து கற்றுக் கொள்கிறோம்.. கற்றுக்கொண்ட விஷயம் ரோபோவுக்கு பரிமாறப்படுகிறது.. பிறகு எல்லாமே ஆட்டோமேட்டிக்காக அது பார்த்துக் கொள்கிறது.. 




உதாரணத்திற்கு வண்டி ஓட்ட கற்றுக் கொள்ளும் போது.. நாம் விழிப்பாக ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு இயக்கத்தையும் கற்றுக்கொள்வோம்.. அது ரோபோவிற்கு பரிமாற்றம் செய்யப்படும் போது.. அது மிகத் திறமையாக வண்டி ஓட்டுதலை பார்த்துக் கொள்ளும்.. நிறைய பேர் (நாமே) வண்டி ஓட்டுவதை பார்த்தோமானால்.. ஆரம்பித்த இடத்தில் இருந்து சென்று சேரும் இடம் வரை.. ஆட்டோமேட்டிக் மோடில் (Mode)  வண்டி ஓட்டிக் கொண்டிருப்பார்கள்…எப்படி இங்கு வந்து சேர்ந்தோம் என்று கூட சிலருக்கு தோன்றும்.. அப்போ ஆட்டோமேட்டிக்காக வண்டி ஓட்டுதல் நடக்கிறது.. அவர்கள் வேறு ஏதோ சிந்தனையில் இருப்பார்கள்.. 


எப்போதும் போல இயல்பான சூழ்நிலையில் ஆட்டோமேட்டிக் ஓட்டுதல் நடந்து கொண்டிருக்கும்.. திடீரென்று ஒரு ஆக்சிடென்ட் நடக்கும் சூழ்நிலை உருவானால்.. அந்த புதிய சூழ்நிலையை ரோபோவினால் சமாளிக்க முடியாது.. அப்போது உடம்பில் ஒரு ஜெர்க் (Jerk).. அப்போது ரோபோவுக்கு பதிலாக நாம் ஓட்ட ஆரம்பிப்போம்.. 


பலமுறை நாம் கோபப்படக்கூடாது என்று நினைப்போம். ஆனால் அதே பழைய சூழ்நிலை வரும்போது கோபப்பட்டு கத்துவோம்.. இது ஏன் இப்படி நடக்கிறது.. ரோபோ அந்த சூழ்நிலையை தனது பழைய ரெக்கார்ட் ல் உள்ள படிக்கு பதில் கொடுப்பதனால்(Reaction as per the old record) நடக்கிறது.. இதற்கு என்ன தான் தீர்வு..? முதலில் நாம் இருக்க வேண்டும்.. Start being! 


காஷ்முஷ் புத்தரிடம் சென்று நான் இந்த சமூகத்திற்கு சேவை செய்ய விழைகிறேன் நான் எவ்வாறு சமூகத்திற்கு சேவை செய்வது என்று கேட்கிறார்.. அப்போது புத்தர் அவரை ஆழமாகவும் கருணையுடனும் நோக்கினார்.. பிறகு கேட்டார்.. முதலில் நீ எங்கே இருக்கிறாய்? நீ இருக்கிறாயா என்று கேட்க.. காஷ்முஷ்க்கு விளங்கவில்லை.. ஏனென்றால் முழுவதுமாக ரோபோ வாழ்க்கை நடத்தும்போது.. நாம் இருப்பதில்லை.. 


புத்தர் சொன்னார்.. நீ முதலில் இரு.. பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது தானாகவே தெரியும்..யாரையும் கேட்க அவசியமில்லை.. நடக்கும்போது நீ நட! உண்ணும்போது நீ உண்!.. எளிய காரியங்கள் செய்யும் போது.. ரோபோவை செய்ய விடாமல் நீ செய்ய ஆரம்பி..


இதைப் புரிந்து கொள்ள முடிகிறதா? உங்கள் கையை விழிப்புணர்வுடன் அசைத்துப் பாருங்கள்.. அதாவது தன்னினைவுடன் (Consciously) காலை எடுத்து வையுங்கள்.. உண்ணும் போது மெதுவாக கான்ஷியஸ் ஆக உண்ணுங்கள்.. எதையும் கான்ஷியஸ் ஆக செய்யும் போது.. நம்முடைய எனர்ஜி அந்த அந்த செயலில் இருப்பதால் .. சிந்தனை செய்ய முடியாது.. ஏனெனில் அதற்கு எனர்ஜி செல்லாது.. எளிய காரியங்களில் முதலில் ஆரம்பித்து.. நாம்தான் மாஸ்டர்.. ரோபோ அல்ல என்பதை நாமும் ரோபோவும் உணரும் போது.. கஷ்டமான சூழ்நிலைகள்..(Like getting angry) வரும்போதும்  நாம் விழிப்புணர்வுடன் கவனிக்க ஆரம்பிப்போம்.. அப்போதுதான் நம்முடைய இருப்பை உணர ஆரம்பிப்போம்..(We start being present as presence ).. 


ஒரு நாளில் சிலமுறையாவது.. சிந்திப்பதை நிறுத்தி நாம் எங்கு இருக்கிறோம் என்று நம்மையே கேட்டுக்கொண்டு இங்கு தான் இப்பொழுது தான் என்று நினைவு படுத்தி கொள்ளலாம்..! நான் இதை பலமுறை செய்வது உண்டு.. ஏதாவது சிந்தனையில் மூழ்கி இருக்கும்போது நிறுத்தி நான் இருக்கிறேன் என்று புன்னகையுடன் கூறிக் கொள்வது அவசியம்..


உம்முடைய உறவு முறைகளில் ரோபோ நுழைய ஆரம்பிக்கும் போது.. அது சரியாக இருக்காது.. வாழ்க்கை ஒவ்வொரு கணமும் புதிதாக நடந்து கொண்டிருக்கும்போது, பழைய நினைவுகளை வைத்து பதில் கொடுப்பது (React) செய்வது எந்த விதத்தில் சரியாகும்? 


விழிப்புணர்வுடன் ஒவ்வொரு காரியத்தையும் செய்யும்போது அது தியான நிலை.. ஏனெனில் அப்பொழுது சிந்திப்பது நின்றுவிடும்.. சிந்தித்தல் இல்லாத போது தான் நாம் இருக்கிறோம்..


நாம் தொடர்வோம்..


(மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர்.  ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு

news

மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்

news

திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்

news

மடிக்கணினி திட்டத்தை முடக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் 23ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!

news

அதிமுக பெயரை கூட சொல்லவில்லை...மேடம் ஜெயலலிதா...முதல் முதலாக பாராட்டிய விஜய்

news

சின்னச் சின்ன பட்டாம்பூச்சியே.. Ode to the butterfly!

news

எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கடும் அமளிக்கு இடையே 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது

அதிகம் பார்க்கும் செய்திகள்