டெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு போர்ச் சூழலை நோக்கி போய்க் கொண்டுள்ளன. போர் வருமா இல்லையா என்ற பதைபதைப்பில் பலரும் உள்ளனர். ஆனால் போர் என்று வந்தால் நிச்சயம், இந்தியாவின் கைதான் ஓங்கியிருக்கும். அதேசமயம், பாகிஸ்தானிடமும் ஆயுத பலம் இருக்கிறது. குறிப்பாக இரு நாடுகளுமே அணு ஆயுத நாடுகளாகவும் விளங்குவதால் பாதிப்பு இரு நாட்டுக்கும்தான் மிகப் பெரிய அளவில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதனால்தான் நேருக்கு நேரான போர் ஏற்படாமல், அதேசமயம், பாகிஸ்தானுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் டிப்ளமேட்டிக்கான போரில் இந்தியா குதித்துள்ளது. சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்த்தை நிறுத்தி வைக்கும் முடிவு யாரும் எதிர்பாராதது.. இந்த நடவடிக்கையானது பாகிஸ்தானுக்கு விவசாயம், குடிநீர் என பல துறைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தியாவின் நோக்கம் பாகிஸ்தானை உலக அரங்கில் தனிமைப்படுத்த வேண்டும், பாகிஸ்தான் மக்கள் அந்த நாட்டு அரசு மற்றும் ராணுவத்தின் தவறுகளை தட்டிக் கேட்டு அவர்களுக்கு எதிராக திரும்ப வேண்டும்.. தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் போக்கை பாகிஸ்தான் கைவிட வேண்டும்.. சந்தோஷமாக வாழ வேண்டுமா வா வாழலாம்.. இல்லை சங்கடப்படுத்திக் கொண்டேதான் இருக்க விரும்புகிறாயா.. அப்படியானால் நீ அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும்.. அனுபவிக்க வேண்டும்.. இதுதான் இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு.. சுருக்கமாக சொல்வதானால், பாகிஸ்தான் திருந்த வேண்டும்.. இல்லாவிட்டால் காலாகாலத்துக்கும் வருந்தும் அளவுக்கான பாதிப்பை தர இந்தியா தயாராகி விட்டது - போர் மூலமாக அல்ல, இதுபோன்ற ராஜ்ஜிய ரீதியிலான நடவடிக்கைகள் மூலம்.
இந்தியா தற்போது எடுத்துள்ள சில நடவடிக்கைகளுக்கே பாகிஸ்தான் ஆடிப் போயுள்ளதாக சொல்கிறார்கள். காரணம், மக்கள் மத்தியில், இந்தியா செய்வது சரிதானே, நாமதான் திருந்தணும் என்ற எண்ணம் அதிகரித்து விட்டால், பிறகு நமக்கு ஆபத்து என்று பாகிஸ்தான் ராணுவமும், அதன் பிடியில் இருக்கும் ஆட்சியாளர்களும் அச்சப்படுகிறார்கள். மக்கள் புரட்சி வெடித்தால் அதை சமாளிப்பது கடினம் என்பதும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் கவலையாகும். இதனால்தான் இந்தியா அடிக்காமலேயே பாகிஸ்தான் ஆட்சியாளர்களை அழ வைக்க ஆரம்பித்துள்ளது.
சரி அதை விடுங்கள்.. இரு நாடுகளின் ராணுவ பலம் குறித்து இப்போது ஒரு ஒப்பீட்டைப் பார்ப்போம்.
இரு நாட்டு ராணுவத்தையும் முதலில் ஒப்பிடவே முடியாது. காரணம், எல்லா வகையிலும் வல்லமையானது நமது ராணுவம்தான். 1971 போரிலேயே நாம் அதை உலகுக்கு உணர்த்தியிருந்தோம். இப்போது அதை விட பல மடங்கு நாம் நவீனமாகியுள்ளோம்.. அப்போது ரஷ்யா போன்ற சில நாடுகளே நமக்கு ஆதரவாக இருந்தன. ஆனால், உலக வல்லரசு நாடுகளின் ஆதரவு இப்போது நமக்கு ஒரு சேர உள்ளது. அமெரிக்காவும் நமக்கே ஆதரவாக உள்ளது. ரஷ்யா எப்போதும் போல ஆதரவாக உள்ளது. இஸ்ரேல் நம்முடன் உள்ளது. அதேபோல அரபு நாடுகளும் கூட நம் பக்கமே உள்ளன. மிகப் பெரிய வலிமையுடன்தான் நாம் உள்ளோம் என்பதில் சந்தேகம் இல்லை.
உலக அளவில் 4வது மிகப் பெரிய ராணுவமாக இந்தியா விளங்குகிறது.
பாகிஸ்தான் இந்த வரிசையில் 12வது இடத்தில் இருக்கிறது.
இந்திய ராணுவத்தில் ஆக்டிவாக உள்ள வீரர்களின் எண்ணிக்கை 14,55,440 பேர்
பாகிஸ்தான் வீரர்கள் எண்ணிக்கை 6,54,000
இந்திய விமானப்படை பாகிஸ்தானை விட வலிமையானது. 2229 விமானங்களை இந்திய விமானப்படை வைத்துள்ளது.
பாகிஸ்தானிடம் 1399 விமானங்கள் உள்ளன.
இந்தியாவிடம் உள்ள போர் விமானங்களின் எண்ணிக்கை 513.
பாகிஸ்தானிடம் 328 போர் விமானங்கள் உள்ளன.
இந்திய விமானப்படையிடம் 899 ஹெலிகாப்டர்கள் உள்ளன.
பாகிஸ்தானிடம் 373 ஹெலிகாப்டர்கள் உள்ளன.
இந்திய விமானப்படையிடம் உள்ள தாக்குதல் ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கை 80 ஆகும்.
பாகிஸ்தானிடம் 57 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் உள்ளன.
இந்திய ராணுவத்திடம் உள்ள பீரங்கிகளின் எண்ணிக்கை 4201 ஆகும்.
பாகிஸ்தானிடம் 2627 டாங்குகள் உள்ளன.
இந்திய ராணுவத்திடம் உள்ள கவச வாகனங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரத்து 594 ஆகும்.
பாகிஸ்தானிடம் வெறும் 17,516 கவச வாகனங்களே உள்ளன
இந்தியாவிடம் உள்ள விமானம் தாங்கி போர்க்கப்பல்களின் எண்ணிக்கை 2 ஆகும்.
பாகிஸ்தானிடம் ஒரு விமானம் தாங்கி போர்க் கப்பல் கூட இல்லை.
இந்தியாவிடம் 18 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.
பாகிஸ்தானிடம் 8 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.
இந்தியாவிடம் டெஸ்ட்ராயர் வகை போர்க்கப்பல்கள் 13 உள்ளன. பாகிஸ்தானிடம் ஒன்றுமில்லை
அணு ஆயுதங்களை இரு நாடுகளும் வைத்துள்ளன. இரு நாடுகளிடமும் தலா 150க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால் இந்தியா முதலில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையை வைத்துள்ளது. ஆனால் பாகிஸ்தானிடம் அப்படிப்பட்ட நிலைப்பாடு இல்லை. முழு அளவிலான போர் இரு நாடுகளுக்கும் இடையே மூண்டால் பாகிஸ்தான் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதை மறுப்பதற்கில்லை. ஆனால் முழு அளவிலான போர் வராது என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் நம்பிக்கையுடன் உள்ளன.
அதேசமயம், பாகிஸ்தானுக்கு ஆதரவு தர முன்பு போல உலக நாடுகள் இப்போது முன்வருவதில்லை. பாகிஸ்தானின் விஷமத்தனத்தை அவை புரிந்து கொண்டு விட்டன. இது இந்தியாவுக்கு மிகவும் சாதகமான ஒரு அம்சமாக மாறியுள்ளது. எனவே பாகிஸ்தான் விரைவில் வழிக்கு வர வேண்டும்.. வந்தால் அதற்கு நல்லது, அந்த நாட்டு மக்களுக்கு நல்லது.
பொறுத்திருந்து பார்ப்போம்.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}