சென்னை: டாஸ்மாக்குக்கு எதிராக பாஜகவின் நடத்தும் போராட்டத்தை வரவேற்கிறோம். மதுவுக்கு எதிராக யார் போராட்டம் நடத்தினாலும் வரவேற்போம். மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக்கில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைக்கு பின்னர் அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி வரையில் ஊழல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக கட்சி சார்பில் இன்று சென்னையில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் மற்றும் அக்கட்சியை சேர்ந்த பலரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அப்போது அண்ணாமலை கூறுகையில், எங்களை பொறுத்தவரை அடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.
அடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு தேதி சொல்ல மாட்டேன். காவல்துறைக்கு மரியாதை கொடுத்து தேதி அறிவித்திருந்தோம். ஆனால் அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள் என்றால் ஒரு அரசியல் கட்சியா நாங்களும் வேற ஸ்டைலில் செய்ய ஆரம்பிப்போம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டாஸ்மாக் விவகாரத்தை கண்டித்து பாஜக முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திலைவர் திருமாவமவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
இந்த பேராட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். மதுபான கடைகள் ஒழிக்கப்பட வேண்டும். மூடப்பட வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டிற்காக குரல் கொடுக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அது அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்ற ஒரு உத்தியாக கையாள்கிறார்கள் என்றால் அதில் அவர்கள் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது. பாஜக ஆளும் மாநிலங்களில் மது ஒழிப்பை அமல்படுத்தினால் வரவேற்கலாம், பாராட்டலாம். கூட்டணி கட்சியாக இருந்தாலும், தோழமை கட்சியாக இருந்தாலும் தேர்தல் வாக்குறுதியில் கூறிய படி, திமுக அரசு மது ஒழிப்புக்கொள்கையில், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் என்று தெரிவித்துள்ளார்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}