திருவதிகை விரட்டாணம் சன்னதியில் உருவான திருநாவுக்கரசர்!

Aug 01, 2026,02:59 PM IST

- கலைவாணி கோபால்


திருநாவுக்கரசர் எனும் சைவக் குறவர் திருவதிகை விரட்டாணம் சன்னதியில் தான் உருவானார். மடை திறந்த வெள்ளம் போல.. தனக்குள் இருந்த பக்தி அன்பினை பாடல்கள் மூலம் திருவதிகை விரட்டாண பெருமானுக்கு சமர்ப்பித்தார்.


65 வயது தன் தம்பியினை சைவனாக  கண்ட 70 வயது திலகவதியார். சிவன் தன்னை கைவிடவில்லை. என ,ஆனந்த கண்ணீர் வடித்தார். கண்களில் நீர் மட்டுமே அவருக்கு வந்து கொண்டு இருந்தது. கிட்டத்தட்ட 48 காலம் அவர்களுடைய விண்ணப்பம் நிறைவேறியதைக் கண்டு ஆனந்த கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல், சமணரால் தீர்க்க முடியாத ,பெரும் நோய் சைவ ஆலயத்தில் தீர்ந்தது. என்றால், சைவம் எப்படிப்பட்ட பக்தியினை கொண்ட மதம்? என்று பெருமிதம் அடைந்தார்.


திருநாவுக்கரசருக்கு நோய் தீர்ந்தது. என்று கேள்விப்பட்ட சமணர்கள் அவரை மடத்துக்கு திரும்ப அழைத்தனர். ஆனால், திருநாவுக்கரசர் போக மறுத்துவிட்டார். சமணர்கள் 'இதனால், மிகவும் கோபம் அடைந்தனர். 


அப்போது... காஞ்சியினை ஆண்ட சிம்ம விஷ்ணுவின் மகன் மகேந்திரவர்மனிடம் (அப்போது அவர் சமணராக இருந்தார்.) திருநாவுக்கரசர் சைவத்திலே இணைந்ததை தவறுதலாக மகேந்திரா வருமனுக்கு ஜோடித்து சொன்னார்கள்.




அதாவது, தர்மசேனருக்கு ஒரு நோயும் கிடையாது. அவர்... அக்கா பாசத்தில் நோய் இருப்பதாக கூறி, அங்கு சென்று நம்மிடம் கற்ற வித்தைகளை வைத்து , சமண மதத்தை விடுத்து சைவத்தை பரப்பி வருகிறார்.  இது சமண விரோதம் மட்டுமல்ல. ராஜவிரோதமும் கூட, இதற்கு என்ன? தண்டனை உண்டோ !அதை செய்யுங்கள். என்று அவரிடம் கோல் மூட்டினார்கள்.


சமணர்கள்  வலையில் சிக்கிய காஞ்சி மன்னனும், அவர்கள் கூறியதை அப்படியே நம்பி. திருநாவுக்கரசருக்கு தண்டனை வழங்க  ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 


சமணத்தில் பெரும் பற்றுடைய மகேந்திரவர்மன். தர்மசேனர் ,ஒரு ஏமாற்றுக்காரர் என எண்ணி அவரை அழைத்து வர ஆணையிட்டார். ஆனால், திருநாவுக்கரசருக்கு சமணர்களின் எல்லா தந்திரங்களும், அவர் அறிந்திருந்தார். எதற்காக? இவர்கள் நம்மை அழைக்கிறார் என்ற காரணமும், அவருக்கு தெரிந்திருந்தது. அதனால் அவர் மன்னனை சந்திக்க மறுத்து விட்டார். 


மன்னரின் அமைச்சரே, வந்து சொன்னார். ஐயா நீ சைவரா? சமணரா? என்பது அடுத்த பிரச்சினை. இப்போது ,நீர் நாட்டின் குடிமகன் இதனால் , மன்னனை நீர் சந்திக்க வேண்டியதும் கடமை என்றார். அதைக்கேட்டு சிரித்த திருநாவுக்கரசர் தான் யாருக்கும் குடிமகன் அல்ல,! அப்படி "அரச தண்டனையில் சிக்கி எமனே எம்மை உயிரெடுக்க வந்தாலும் அவனுக்கும் அஞ்சுபவரும் அல்ல"! நாம். ஈசனின் குடிமகன் என பொருள்படும் விதம் ஒரு பதிகத்தை பாடினார்.


"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம். நரகத்தில் இடர்படும் நடலை இல்லோம்" ஈசனைத் தவிர யாருக்கும் அஞ்சப் போவதில்லை என்பதில் உறுதியாய் இப்பாடலை பாடினார். மன்னனை சந்திக்கப் போவதும் எமனை சந்திக்கப் போவதும் ஒன்று என்று அறிந்தும், தெரிந்திருந்தும், திலகவதியாரும், புன்னகை பூக்க எனக்கு 70 வயதில் இந்த அற்புதம் நடத்திய சிவபெருமான். இனி உன்னை கைவிட மாட்டார் என்று கூறி ஈசன்  மேல் உள்ள நம்பிக்கையில் திருநாவுக்கரசுரை மன்னனை சந்திக்க அனுப்பி வைத்தார்.


"ஈண்டு வரும் வினைகளுக்கு இறைவனுளன்" எனச் சொல்லியபடி மன்னர் படைகளிடம் தன்னை ஒப்படைத்தார் திருநாவுக்கரசர்.


(தொடரும்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்