- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 10 திருவெம்பாவை பாசுரம் 10.. பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்!
திருவெம்பாவை பாசுரம் 10 :
பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

பொருள் :
சிவ பெருமானின் திருவடிகள் ஏழு பாதாள உலங்களையும் கடந்து, வார்த்தைகளால் விளக்கி சொல்ல முடியாத சிறப்புடன் திகழ்கின்றன. மலர்கள் பலவும் சூடிய அவனது திருமுடி அனைத்திற்கும் மேலானதாக உள்ளது. அவன் ஒரு உருவன் கொண்டவன் கிடையாது. அன்னை பராசக்தியை தன்னுடைய உடலில் சேர்த்து இரண்டு உருவமாக அர்த்தநாரீஸ்வரனாக இருப்பவன். வேதங்களும், விண்ணுலகில் உள்ளவர்களும், மண்ணுலகில் உள்ளவர்களும் பாடி துதித்தாலும் அவனது பெருமையை சொல்லி விட முடியாதவன். அவர் அடியாளர்களின் உள்ளங்களில் வசிப்பவன். குற்றமில்லாத குலத்தில் பிறந்து சிவனுக்கு தொண்டு செய்யம் பெண் பிள்ளைகளே! அவனுடைய ஊர் எது, அவன் எப்படிப்பட்ட தன்மை கொண்டவன், அவனுக்கு எத்தனை பெயர்கள், அவனை எப்படி பாட வேண்டும் என்பதை முழுவதுமாக அறிந்தவர் எவரும் இல்லை. அவ்வளவு பெருமை மிக்க நம்முடைய தலைவனாகிய சிவ பெருமானை நம்மால் முடிந்த மொழிகளில் போற்றி பாடிடுவோம் வாருங்கள் பெண்களே!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
செவ்வாயின் அதிபதியான முருகப்பெருமானுக்கு தை கிருத்திகை .. சிறப்புகள்!
சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்!
விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தங்கம் விலை இன்று சற்று குறைந்தது ... வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.400 நோக்கி உயர்வு!
ஜெபின்!
யார் குப்பைக்காரன்?
டிங்டாங் டாங் டிங்டாங்.. இரண்டும் ஒன்றோடு ஒன்று.. அது ஏன் நிமிஷத்துக்கு 60 விநாடி?
ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
{{comments.comment}}