- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 13 திருவெம்பாவை பாசுரம் 13.. பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
திருவெம்பாவை 13 :
பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.

பொருள் :
கரிய நிற குவளை மலர்கள், சிவந்த தாமரை மலர்கள் அழகாக மலர்ந்திருக்கும் இந்த குளத்தில் ஒரு பகுதியில் பறவைகள் நீர் அருந்தி செல்கின்றன. மற்றொரு புறம் தங்களின் அழுக்குகளை கழுவி சுத்தம் செய்து கொள்ள மக்கள் வருவகிறார்கள். அவர்கள் நமசிவாய என சொல்லி சத்தமிடுகிறார்கள். இதனால் இந்த குளம் முழுவதும் சிவன் மற்றும் பார்வதியும் எங்கும் நிறைந்திருப்பது போல் இந்த குளம் காட்சி அளிக்கிறது. இந்த தெய்வீக தன்மை கொண்ட குளத்தில் சங்கு வளையல்கள் சத்தமிட, கால் சிலம்புகள் கலகலவென ஒலி எழுப்ப, குமிழ்கள் எழ, மீன்கள் நடும் வகையில் பாய்ந்து நீராடி, நம்முடைய பிறவி பிணியில் இருந்து நீராட பெண்களே வாருங்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}