- ஸ்வர்ணலட்சுமி
திருவெம்பாவை 18 :
அண்ணாமலையான் அடிக்கமல் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

பொருள் :
சூரியனின் ஒளிக்கதிர்கள் வெளிப்பட்டதும் எப்படி வானில் இருக்கும் நட்சத்திரங்கள் அனைத்தும் மறைந்து விடுமோ அப்படி, அண்ணாமலையாரின் தாமரை போன்ற சிவந்த திருவடிகளை பணிந்ததும் தேவர்களின் மணிமுடியில் இருக்கும் நவரத்தினங்கள் ஒளி இழந்து விட்டன. பெண், ஆண், திருநங்கை என அனைத்து உருவிலும் காட்சி தரும் அவர் வானமாகவும், பூமியாகவும், மற்ற உலகங்களாகவும் விளங்குகிறார். கண்ணுக்கு அமுதத்தை போன்ற இனிமை தரும் அவரது சிலம்பணிந்த திருவடிகளை போற்றி பாடி புண்ணிய பலன்களை பெற்றிட இந்த பூக்கள் நிறைந்திருக்கும் குளத்தில் குதித்து நீராட வாருங்கள் பெண்களே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
No Sunday leave for Women: தினம்தினம் தொடர்கதையே!
தென்றலுடன் கலந்த தேனிசைத் தேவா
தேனிசை ஓய்ந்தது… நினைவுகள் ஓயவில்லை!
ஆனந்தம் அமைதி வேண்டுமென்றால் ..!
வைத்தியம் - ஒரு நிமிடக் கதை (39)
சிறகை விரி.. வா சேர்ந்து பறப்போம்!
தேவாதி தேவா.. தெருவோர கானாவை தேனாக்கியவரே!
3ம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட.. கோயம்பேடு ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில்
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
{{comments.comment}}