சென்னை: அண்ணாவால் வளர்க்கப்பட்ட திமுகவினர் கூண்டுக் கிளிகள் அல்ல, கூவும் குயில்கள். இந்த இயக்கம் விதையாக, விருட்சமாக, மரமாக வளர்க்கப்பட்டு பல கோடி மக்களுக்கு நிழல் தரும் இயக்கம். திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள் என்று கூறியுள்ளார் அமைச்சர் சேகர்பாபு.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக பாஜகவிற்கும் திமுகாவிற்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது. மத்திய பாஜகவின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக திருச்சியில் தமிழக பாஜக சார்பில் நேற்று பொதுக்ககூட்டம் நடந்தது. அப்போது திமுகவினர்களை அண்ணாமலை கடுமையாக தாக்கிப் பேசி இருந்தார். அதற்கு பதில் கூறும் விதமாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், படிப்பு, மனம்,சேவைக்கும் சம்மந்தம் இல்லை. மனிதாபிமானத்தோடு உயர் பதவிக்கு யார் வந்தாலும் மக்கள் சேவையை தலையாய கடமையாக ஏற்று செய்வார்கள் என்பது அண்ணாமலை போன்ற தற்குறிகளுக்கு தெரியாது. என்னை சரித்திரப்பதிவு குற்றவாளி என சொல்லும் அண்ணாமலை கர்நாடகாவில் டூப் போலீஸ் , லஞ்சம வாங்கிய பேர்வழி என நான் கூட குற்றம் சுமத்த முடியும். ஆதாரம் இல்லாமல் வாய் நுளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசுவது நியாயமில்லை. ஆதாரத்தை காட்டி தான் அண்ணாமலை குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும். அதை விடுத்து போகிற போக்கில் ஏதாவது வாரித்தூற்றி விட்டு போனால் எப்படி முறையாகும். ஆதாரத்தை காட்டச் சொல்லுங்கள்.
அண்ணாவால் வளர்க்கப்பட்ட திமுகவினர் கூண்டுக் கிளிகள் அல்ல, கூவும் குயில்கள். இந்த இயக்கம் விதையாக, விருட்சமாக, மரமாக வளர்க்கப்பட்டு பல கோடி மக்களுக்கு நிழல் தரும் இயக்கம். ஊசி போன பண்டமாக இருக்கும் பாஜகவை 2026 இல் மக்கள் தூக்கி எறிய தயாராக இருக்கின்றனர். திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள். நீதிபதிகளையே தலைக்கு மேலே இருப்பதற்கு ஒப்பானவர்கள் என பேசுகிறவர்கள் நாங்கள் அல்ல.
எங்களுக்கு எங்கள் முன்னோர்களால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. சிறை என்றாலும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ள தயாராகாக இருப்பது தான் திமுக. இந்தியாவின் வரைபடத்தில் கீழே இருக்கிற தமிழ்நாட்டை வரைபடத்தின் மேலே இருக்கிற அத்தனை பேரையும் திருப்பிப் பார்க்க வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். லோக்சபா தேர்தலில் 40 இடங்களை கைப்பற்றி அலறவிட்டோம். 2026 தேர்தலில் 200 தொகுதிகள் என்பது நிச்சயம். 234 தொகுதிகளில் வெற்றி என்பது லட்சியம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அமைச்சராகப் பதவியேற்றார் மனோ தங்கராஜ்.. மீண்டும் பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டது!
நான் கேட்டதும் ஷாருக்கான் செய்த அந்த செயல்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வாசிம் அக்ரம்
வங்கி வேலைக்கு Goodbye சொல்லி விட்டு.. Audi கார் மூலம் பால் விற்பனை செய்யும் இளைஞர்.!
கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!
அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
{{comments.comment}}