சென்னை: தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும். பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள் பாஜக கூட்டணியை விரும்புவார்கள் என்று கோயம்புத்தூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் பேசினார். அவர் பேசுகையில்,
கூட்டணி - கட்சி மேலிடம் முடிவெடுக்கும்

கூட்டணி தொடர்பு மற்றும் பேச்சு வார்த்தை குறித்து கட்சியின் தேசிய தலைமை தான் அறிவிக்கும். அதுவரைக்கும் செய்வதற்கு ஏராளமான பணிகள் இருக்கிறது. வருகிற 28ஆம் தேதி காலை தமிழகத்தினுடைய மாநில தேர்தல் அலுவலகம் திறக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பணிகளை துவங்கி விட்டது.
ஒவ்வொரு தொகுதிக்கும் அமைப்பாளர்கள், பொறுப்பாளர் நியமித்து அவர்கள் மகளிர் மாநாடு, இளைஞர் மாநாடு, விவசாய மாநாடு என நடத்த துவங்கிவிட்டார்கள். எங்களுடைய தேசிய தலைவர் நட்டா அவர்கள் எலக்சன் ஆந்தத்தை வெளியிட்டுவிட்டார்.
எப்பொழுதும் போல தேர்தல் பிரச்சாரம் முதலில் துவங்கப்பட்டு விட்டது. களத்திலே பாஜக முன்பாக செல்கிறது. தேர்தலுக்கான வேட்பாளர்களின் பட்டியல் விவரங்கள் எல்லாமே கட்சி தலைமை முடிவு செய்யும். அதற்கான பிரசாரம் எப்போதும் போல தேர்தல் களத்தில் பாஜக முன்னரே ஆரம்பித்து விட்டது.
அடுத்த பிரதமர் யார்
வருகின்ற தேர்தலில் இந்த நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு தான் மக்கள் பதில் அளிக்க போகின்றார்கள். அதை ஒட்டி மக்களிடம் முன்வைக்க வேண்டிய கேள்வியே, இந்த நாட்டை யார் ஆட்சி செய்யக்கூடியவர். இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு வாய்ப்பு இருக்கக்கூடிய யார். யார் இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்களோ அவர்களுக்கு மார்க் போடுங்கள் என்று தான் கேட்க வேண்டும்.
தேர்தல் என்பது முழுக்க முழுக்க மத்தியிலே அமையக்கூடிய ஆட்சியை பொருத்தது. பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் அத்தனை பேரும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியை விரும்புவார்கள் என கூறியுள்ளார்.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}