அன்பான இதயத்திற்கு நடிக்க தெரியாது துடிக்க மட்டுமே தெரியும்!

Jul 11, 2026,02:59 PM IST

- இரா. மும்தாஜ் பேகம்


உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்தினால் அது பாவம். உனக்காக ஒருவர் கண்ணீர் சிந்தினால் அது பாசம்.


அன்பு அதிகம் கிடைக்கின்றது என்றால் நாம் புரிந்து கொள்ள வேண்டும் காயம் இதைவிட அதிகமாக கிடைக்கப் போகிறது என்று.


தனக்கே வலித்தாலும் தன்னை சேர்ந்தவர்களுக்கு வலிக்க கூடாது என்று நினைப்பது தான் உண்மையான அன்பு 


ஒருவரை இழக்கும் போது வரும் கண்ணீரை விட அவர்களை இழக்கக்கூடாது என்று நினைக்கும் போது வரும் கண்ணீருக்கு இன்னும் வலி அதிகம்.


அன்பான இதயத்திற்கு நடிக்க தெரியாது துடிக்க மட்டுமே தெரியும்.




நம் கோபங்களின் அர்த்தம் புரியாதவர்களுக்கு நம் அன்பின் ஆழமும் புரியாது. அவர்களிடம் கோபத்தைக் காட்டுவதும் வீண் அன்பை எதிர்பார்ப்பதும் வீண். 


அன்பு என்பது நெல் மாதிரி போட்டால் தான் முளைக்கும். வம்பு என்பது புல் மாதிரி எதுவும் போடாமலே முளைக்கும் 


நேசிப்பது எல்லாம் கிடைத்துவிட்டால் கண்ணீர் துளிகளுக்கு மதிப்பில்லை கிடைப்பதை எல்லாம் நேசித்து விட்டால் கண்ணீருக்கு அவசியமில்லை 


விளக்கம் அளித்து அன்பை வாங்கவும் கூடாது. விளக்கம் அளித்து அன்பை கொடுக்கவும் கூடாது 


முட்டாள் பட்டம் கிடைப்பதற்கு அறிவு இல்லாமல் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அதிக அன்போடு இருந்தாலே முட்டாள் பட்டம் கிடைத்துவிடும் 


நாம் நேசிப்பவர்களிடம் கூட நம்முடைய பலவீனங்களை வெளிப்படுத்தக் கூடாது ஏனெனில் அவர்கள் எப்போது நம்முடைய பலவீனத்தை பயன்படுத்தி கொள்வார்கள் என்பது தெரியாது. 


எதிர்பார்த்த போது கிடைக்காத எதுவும் அதற்குப் பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் சந்தோசம் கொடுப்பதில்லை. 


(இரா. மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்