சென்னை: அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் இன்று 3 மணி நேரம் நடை சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரலட்சுமி நோன்பு மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு மக்கள் கோயில் மற்றும் சுற்றுலா தலங்களில் அதிகமாக கூடியிருந்தனர். அந்த வரிசையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மூன்று மணி நேரம் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இருப்பினும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் காலை 6:00 மணி முதல் இரவு 8.45 மணி வரை நடை திறக்கப்பட்டிருந்தது. இதனால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இன்று பூணூல் அணிவிக்கும் தினமான ஆவணி அவிட்டம். இந்த நன்னாளில் அர்ச்சகர்கள் மற்றும் தலைமை குழுக்கள் பூணூல் மாற்றம் செய்வர். இதன் காரணமாக, திருத்தணி முருகன் கோவில் மதியம் 12 மணி முதல் 3:00 மணி வரை கோவில் நடை சாத்தப்படும். இந்த நேரத்தில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி கிடையாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நேரத்தில் கோவிலில் பணி புரியும் அச்சகர்கள் மற்றும் குருக்கள் என மொத்தம் 75க்கும் மேற்பட்டோர் பூணூல் மாற்றம் செய்ய உள்ளனர். இதற்கான நிகழ்ச்சி இன்று கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்று மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
தாய்!!!
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
{{comments.comment}}