சென்னை: ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் மதிய வேளைகளில் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி வருகின்றனர். தற்போதே வெயில் அதிகரித்தால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்க கூடும் என மக்கள் புலம்பி வருகின்றனர். இந்த சமயத்தில் வானிலை ஆய்வு மையமும் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என கூறியுள்ளது.

கடந்த வாரம் அறிவிப்பில்,இன்றைய நாளில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும். அதிகபட்சம் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும். இது தவிர தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று ( பிப்ரவரி 24) ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய கூடும் எனவும் அறிவித்துள்ளது.
மீண்டும் நீ வேண்டும் பாரதி!
Vinayagar Chathurthi Special: அழகான அலங்காரம்.. மஞ்சள் பிள்ளையார் செய்வது எப்படி?
கொந்தளித்த திருமா.. கோபம் திமுக மீதா.. முதல்வர் விஜய் மீதா?.. இது தான் காரணமா?
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்
அவசியம் என்றால் தவறான பக்கத்தை கிழிக்கலாம்!
சாலை ஓரம் எல்லாம் கற்கண்டு குவியல், ருசிக்க முடியுமோ?
மூவேந்தர் வீரமும் முண்டாசு கவிக்குள்!
முண்டாசுக் கவிஞன் "பாரதிக்கு" கவிதாஞ்சலி!
இரைதேடும் பறவைகள்!
{{comments.comment}}