சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்களுக்காக ஒரு புதிய வசதியை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தேர்வு தொடர்பான அறிவிப்புகள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ டிஎன்பிஎஸ்சி telegram சேனலை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.
அரசு துறையில் உள்ள ஊழியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு வருடமும் குரூப்-1, குரூப் 2, 2 ஏ, குரூப் 4 என பல்வேறு கட்டங்களாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு வருடமும் டிஎன்பிஎஸ்சி சார்பாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பின்னர் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அரசுத் துறையில் பணி நியமன ஆணை வழங்கப்படும்.
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கான அறிவிப்பை அவ்வப்போது டிஎன்பிசி நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ இணையதளம், டிவிட்டர் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அப்டேட்டுகள் தரப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு முறையும் தேர்வாளர்கள் போட்டி தேர்வுகள் குறித்த அப்டேட்டுகளை உற்று நோக்கி கொண்டே இருந்தால்தான் டிஎன்பிஎஸ்சி குறித்த தகவல்களை முழுமையாக அறிய முடிகிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக மேலும் ஒரு வசதி செய்யப்பட்டுள்ளது.
அது என்னவென்றால் தேர்வாளர்கள் தேர்வு தொடர்பான செய்திகள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வமான டிஎன்பிஎஸ்சி telegram சேனலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிஎன்பிஎஸ்சி telegram சேனலில் சேர விரும்பும் தேர்வாளர்கள், இதுதொடர்பான டெலிகிராம் சானலின் QR code-ஐ ஸ்கேன் செய்து அதில் இணைந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி போட்டித் தேர்வாளர்களுக்கு கவலை இல்லை. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குறித்த அறிவிப்புகளை உடனுக்குடனே இந்த டெலிகிராம் சானலிலும் தெரிந்து கொள்ள முடியும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?
பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்
திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!
இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை
{{comments.comment}}