தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ம் தேதி, சனிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், கார்த்திகை 27ம் தேதி சனிக்கிழமை
இன்று இரவு 08.49 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. காலை 10.30 வரை உத்திரம் நட்சத்திரமும், பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.20 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு, பூர்வீக சொத்துக்களில் இருந்து பண வரவு இருக்கும். பிள்ளைகள் சொல்வதைக் கேட்பார்கள். எதிரிகள் விலகிச் செல்வார்கள். உடன்பிறந்தவர்கள் இணக்கமாக இருப்பார்கள். பணியாளர்கள் கேட்கும் கடனுதவி கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். கணவரின் அன்பில் திளைப்பார்கள். உடல் நலமும் தேறும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு, வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். புதிய நபர்கள் நண்பர்களாக வருவார்கள். வாகனங்களில் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். பண வரவு அதிகரிக்கும். அரசு வேலைகள் எளிதாக நடக்கும். வேலையாட்களின் பணிகள் சிறப்பாக இருக்கும். வீடு, வாகனம் வாங்குவதற்கு யோகம் உண்டு. ஆரோக்கியம் மேம்படும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு, தங்களுக்கு எதிரான வழக்குகள் தோற்கும். பிரிந்து சென்ற உறவினர்கள் மீண்டும் நட்பாவார்கள். அக்கம் பக்கத்தினர் அன்பு காட்டுவார்கள். செய்யும் செயல்களில் நேர்த்தி இருக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவார்கள். யாரிடமும் பணப் பொறுப்பை ஏற்க வேண்டாம். மாணவர்களின் பதற்றம் நீங்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
கடகம் - கடக ராசிக்காரர்கள், சக ஊழியர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். மனைவியிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. போட்டிகளைச் சமாளித்து தொழில் செய்வார்கள். வரவு, செலவில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் அதிக முன்னேற்றம் காண்பார்கள். உடல் பொலிவுடன் இருக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் கருநீலம்.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு, தாய்வழி உறவினர்கள் உதவுவார்கள். பிள்ளைகளின் செயல்களில் கவனம் தேவை. பிரிந்து சென்ற துணை திரும்பி வருவார். நண்பர்களின் அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள். உடல் நலனில் கவனம் தேவை. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
கன்னி - கன்னி ராசிக்காரர்கள், பயணங்களில் உடைமைகளின் மீது கவனம் வேண்டும். கலைஞர்கள் பாராட்டு பெறுவார்கள். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளிடம் மனக்கசப்புகள் ஏற்படலாம். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். மாணவர்கள் கோப்பையை வெல்வார்கள். உடல் பலம் பெறும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.
துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு, வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் பிரச்சனைகள் இருக்காது. இருப்பினும், புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. சக பணியாளர்கள் ஒத்துழைப்பார்கள். ஆர்டர்கள் குவியும். சமூக நல ஆர்வலர்களுக்கு மக்களிடம் பாராட்டும், நன்மதிப்பும் கிடைக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் கிளிப்பச்சை.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு, தம்பதிகளின் மனஸ்தாபம் நீங்கும். சகோதர வழியில் பிரச்சனை வரலாம். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் சேரும். பழைய பாக்கிகள் கைக்கு வரும். வீட்டில் இருந்த சிக்கல்கள் விலகும். புதிய கிளைகளைத் தொடங்குவார்கள். உடல் பொலிவு கூடும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு, வெளியூர் பயணம் மகிழ்ச்சி தரும். சமூகப் பணிகளில் ஆர்வம் கொள்வார்கள். ஆவணங்களை பிறர் பொறுப்பில் தர வேண்டாம். வீட்டுக்கடனில் ஒரு பகுதியைச் செலுத்துவார்கள். மனைவியின் செயல்களைப் பாராட்டுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ஊதா.
மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு, இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. இன்று பல காரியத் தடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது சிறந்தது. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு, தொழிலில் தேக்கம் குறையும். விவசாயிகள் குத்தகை எடுப்பார்கள். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் ஆர்வக் கோளாறுகளை கவனிக்க வேண்டும். மனதில் துணிச்சல் ஏற்படும். விற்பனை பிரதிநிதிகளுக்கு ஆர்டர்கள் குவியும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.
மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு, குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். புதிய மாற்றங்கள் தென்படும். திடீர் செலவுகள் உண்டு. சொத்து பத்திரங்களை கவனமுடன் கையாள வேண்டும். ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். மாணவர்கள் பெருமை சேர்ப்பார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் பொன்னிறம்.
தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை... வெள்ளியின் விலையும் சற்று குறைவு தான்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
கண்ணீரைத் துடைக்க.. இறைவனே இறங்கி வந்து நிற்பான்!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
புட்டு சாப்பிட்டிருப்பீங்க.. முள்ளங்கி புட்டு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா.. செமத்தியான டிஷ்!
வைகறை அழகு.. அந்திபொழுது அழகு.. கறவைகளுடன்.. சேயுமழகு!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 13, 2025... இன்று முயற்சிகள் கைகொடுக்கும்
டெல்லியிலும், சுற்று வட்டாரத்திலும்.. விடிஞ்சு வந்து பார்த்தா.. ஒரே smog.. இயல்பு நிலை பாதிப்பு
{{comments.comment}}