12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 04, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிக்காரர்கள்

Jul 04, 2025,10:21 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஜூலை 04 ம் தேதி, வெள்ளிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆனி 20ம் தேதி வெள்ளிக்கிழமை

மாலை 06.21 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. மாலை 06.58 வரை சித்திரை நட்சத்திரமும், அதன் பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை 

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


சந்திராஷ்டமம் -  பூரட்டாதி, உத்திரட்டாதி


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். பங்குச் சந்தையில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.


ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு பொது நல சேவையில் ஆர்வம் அதிகரிக்கும். பிரபலமானவர்களால் நன்மை உண்டாகும். உங்களைச் சார்ந்திருப்பவர்களின் நிலையை உணர்ந்து உதவுவீர்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை. கணவன் வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். பொறுமை அவசியம். தியானம் செய்வது நல்லது. 


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு மார்க்கெட்டிங் துறையினருக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும். மாணவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய பகுதி நேர வேலைக்குச் செல்வார்கள். குடும்பத் தலைவிகள் அக்கம் பக்கத்தினரிடம் சிரித்து பேசலாம். ஆனால், அதிகம் பேச வேண்டாம்.


கடகம் - கடக ராசிக்காரர்கள் பெற்றோரின் உடல் நலனை கவனித்துக் கொள்வது நல்லது. பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். புதிய நண்பர்களால் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு இழந்த பதவி திரும்ப கிடைக்கும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். 


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்கள் வேலையை சீக்கிரம் முடிப்பார்கள். நினைத்த காரியம் நடக்கும். உடலில் புத்துணர்ச்சி ஏற்படும். பண வரவிற்கு குறைவு இருக்காது. பெண்கள் குலதெய்வ திருவிழாவில் கலந்து கொள்ள கணவர் ஊருக்கு சென்று வருவார்கள்.


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் சூடு பிடிக்கும். லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் செல்ல டிக்கெட் புக் செய்வீர்கள். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் மனஸ்தாபம் வரலாம். அவ்வப்போது பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. மனதில் வைத்து கஷ்டப்பட வேண்டாம். 


துலாம் -  துலாம் ராசிக்காரர்களுக்கு பெண்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். காதல் கைகூடும். வேலையில் சலுகை கிடைக்கும். மாமியாரை சமையலால் அசத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு வேலை அதிகமாக இருக்கும். அதற்கேற்ப சம்பளமும் அதிகமாக கிடைக்கும். பொது நல சேவையில் ஆர்வம் அதிகரிக்கும். பிரபலமானவர்களால் நன்மை உண்டாகும். உங்களைச் சார்ந்திருப்பவர்களின் நிலையை உணர்ந்து உதவுவீர்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை. கணவன் வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். பொறுமை அவசியம்.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சில முக்கியமான வேலைகள் தாமதமாகும். பண விஷயத்தில் சிக்கனம் தேவை. ஆன்மீக பணிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நல்லது நடக்கும். யோகாவில் மனம் லயிக்கும்.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். பெரியவர்களின் ஆசியும் ஆலோசனையும் கிடைக்கும். பெண்களுக்கு இடுப்பு வலி வந்து போகும். உடற்பயிற்சி செய்வது நல்லது. வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவீர்கள். தம்பதிகள் விருந்து விழா என கலந்து கொள்வர். 


கும்பம் -  கும்ப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய குலதெய்வ பிரார்த்தனைகளை முடித்துவிடுவீர்கள். வேலைக்காக நேர்முகத் தேர்வை முடித்துவிட்டு காத்திருப்பவர்களுக்கு இன்று நல்ல செய்தி வரும். உடல் பளிச்சிடும்.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்தனை செய்வது நல்லது. இன்று பல தடைகள் வரலாம். அதனால் புதிய முயற்சிகள் எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும். கவனம் தேவை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!

news

செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?

news

செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!

news

Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!

news

பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?

news

கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக

news

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்

news

மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்