12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 05, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிக்காரர்கள்

Jul 05, 2025,10:38 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஜூலை 05 ம் தேதி, சனிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆனி 21ம் தேதி சனிக்கிழமை

இரவு 08.18 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. இரவு 09.32 வரை சுவாதி நட்சத்திரமும், அதன் பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.57 வரை சித்தயோகம், பிறகு இரவு 09.32 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை 

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


சந்திராஷ்டமம் -  உத்திரட்டாதி, ரேவதி


இன்றைய ராசிபலன் :




மேஷம் - குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய கடனில் ஒரு பகுதியை அடைக்க வழி கிடைக்கும். மாமனார் சொத்தில் பங்கு கொடுப்பார். பிள்ளைகளால் சமூகத்தில் மரியாதை கூடும்.


ரிஷபம் - தம்பதிகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பண வரவுக்கு குறை இருக்காது. பெண்களுக்கு அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவி செய்வார்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 


மிதுனம் - காதலர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து சொத்து, பணம், நகை வந்து சேரும். வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல்நலம் பாதிக்கப்படலாம். மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது. தம்பதிகளுக்கு இடையே மகிழ்ச்சி நிலவும். மனம் ஆன்மீகத்தில் ஈடுபடும். 


கடகம் - குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தம்பதிகளின் அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். குடும்ப விஷயங்களில் மற்றவர்களை தலையிட அனுமதிக்காதீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். எண்ணெய் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 


சிம்மம் - வெளிநாட்டு முயற்சி வெற்றி தரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சூடு பிடிக்கும். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வது நல்லது. மாணவர்கள் ட்யூஷனுக்கு சரியான நேரத்திற்கு செல்லுங்கள். வேகமாக வண்டி ஓட்ட வேண்டாம். நீங்கள் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும். 


கன்னி - வேலையில் மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்கள் மகனுக்கு விசா கிடைக்கும். நம்பிக்கையான ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். எதிர்காலத்திற்காக பணம் சேமிப்பீர்கள். பெண்களுக்கு சளி தொந்தரவு வந்து போகும். 


துலாம் -  வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப் பிரச்சனை இருக்காது. பழைய நண்பர்களை மீண்டும் சந்திப்பீர்கள். கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகள் வரும். நெருங்கிய நண்பர்களுடன் சண்டை வேண்டாம். சோர்வு நீங்கும் நாள். அரசாங்கத்தால் நன்மை உண்டாகும். 


விருச்சிகம் - மருத்துவர்கள் சாதனை படைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். சகோதர, சகோதரிகளிடம் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். தம்பதிகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 


தனுசு -  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்ப்பார்கள். வழக்கறிஞர்களுக்கு வழக்குகள் சாதகமாக இருக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் தேவை. பயணத்தின் போது கவனம் தேவை. 


மகரம் - உயர் படிப்புக்காக வெளி மாநிலத்திற்கு சென்று படிப்பீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இரவில் நீண்ட தூர பயணம் செய்வதை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். வேலை செய்பவர்களுக்கு வேலைச்சுமை இருக்கும்.


கும்பம் -  பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் சேரும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் கோபப்பட வேண்டாம். பொறுமையாக இருப்பது நல்லது. மாணவர்கள் நன்றாக படிப்பார்கள். கணவனிடம் அனுசரித்து போவது நல்லது. நட்பு வட்டம் விரிவடையும். உடல் பொலிவு பெறும். 


மீனம் - உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கியமான நபர்களை சந்திப்பதை தவிர்க்கவும். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இறைவனை வேண்டுவது நல்லது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தானுக்கு பை பை சொல்கிறது மைக்ரோசாப்ட்.. ஊழியர்களைக் குறைத்து வந்த நிலையில் மூடு விழா!

news

அமெரிக்காவின் காலக்கெடுவுக்கு பிரதமர் மோடி பணிந்து போவார்.. ராகுல் காந்தி பேச்சு

news

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு!

news

One Big and Beautiful bill.. வரி மற்றும் செலவு மசோதாவில் கையெழுத்திட்ட அதிபர் டிரம்ப்!

news

தேவசயனி ஏகாதசி.. சனிக்கிழமை இரவு தொடங்கி.. ஞாயிறு காலை முடியும்!

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. குஷ்பு, கெளதமி.. எந்தெந்த நடிகைகள் போட்டியிட சீட் கிடைக்கும்?

news

நிலையற்ற விலையில் தங்கம்... நேற்று குறைந்த தங்கம் விலை இன்று உயர்வு!

news

2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்.. விஜய் வழி தனி வழி.. தெளிவா சொல்லிட்டாரு.. 4 முனைப் போட்டிதான்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 05, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிக்காரர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்