12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 05, 2025... நல்ல செய்தி தேடி வர போகுது

Sep 05, 2025,10:09 AM IST
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.

2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ம் தேதி, வெள்ளிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


விசுவாவசு வருடம், ஆவணி 20ம் தேதி வெள்ளிக்கிழமை
ஓணம் பண்டிகை, மிலாடி நபி, ஆசிரியர் தினம். திருவோணம், பிரதோஷம். அதிகாலை 3 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. இன்று இரவு 11.48 வரை திருவோணம் நட்சத்திரமும், பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.03 வரை சித்தயோகமும், பிறகு இரவு 11.48 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

சந்திராஷ்டமம் - திருவாதிரை, புனர்பூசம்





மேஷம் - உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். கடன் பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உடல் நலம் தேறும்.

ரிஷபம் - குடும்பத்தில் பெண்களுக்கு முடிவெடுக்கும் உரிமை கிடைக்கும். பிடித்த நபரை சந்திப்பீர்கள். அவர்களிடம் மன்னிப்பு கேட்பீர்கள். தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு வரலாம். விட்டுக்கொடுத்து போவது நல்லது. பயணத்தின் போது கவனம் தேவை.

மிதுனம் - திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் வந்து போகும். இறைவனை பக்தியுடன் கும்பிடுவது நல்லது. முடிந்தால் தியானம் செய்யுங்கள்.

கடகம் - சகோதர சகோதரிகள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக செலவு செய்து மகிழ்வீர்கள். இளம் பெண்களுக்கு திருமண முயற்சிகள் தாமதமாகும். உத்யோகத்தில் முக்கியமான கோப்புகளை கையாளும் போது கவனமாக இருங்கள்.

சிம்மம் - எதிர்பாராத சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். குறுகிய தூர பயணம் நல்ல பலன் தரும். சொந்தங்கள் அன்பு காட்டுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கன்னி - காதல் ஜோடிகள் திருமணம் பற்றி முடிவெடுப்பார்கள். மாணவர்கள் திட்டமிட்டு படிப்பார்கள். மார்க்கெட்டிங் துறையினருக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். இளைஞர்கள் நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவார்கள். கலைஞர்கள் எதிர் பாலினத்தவரிடம் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம் -   திடீர் பயணங்களால் அலைச்சல் இருக்கும். செலவுகள் அதிகமாகும். சிக்கனமாக இருங்கள். தூக்கமின்மை, கனவுத் தொல்லை, படபடப்பு வந்து போகும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும்.

விருச்சிகம் - மாணவர்களுக்கு மகிழ்ச்சியான சூழல் உருவாகும். ஆசிரியர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். உடல் நலம் தேறி வரும். நண்பர்களில் சிலர் மட்டுமே உண்மையான அன்புடன் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்.

தனுசு -  குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. விஐபி-களுக்கு நெருக்கமாவீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். கர்ப்பிணிப் பெண்கள் தூரப் பயணங்களைத் தவிர்க்கவும்.

மகரம் - கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கோபம் வரும் போது பொறுமையாக இருப்பது நல்லது. தம்பதிகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே அன்பு கூடும். உடல் பொலிவு பெறும்.

கும்பம் -  அலைச்சலால் தலைவலி உண்டாகும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். எல்லா வேலைகளையும் முடித்து விடுவீர்கள். உணவில் கவனம் தேவை. புதிய வாகனம் ஒன்றை இன்று பார்த்து முன்பணம் கொடுப்பீர்கள். 

மீனம் - காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். அதிக சம்பளத்திற்காக புதிய வேலைக்கு முயற்சி செய்வீர்கள். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் 80,000த்தை நெருங்குகிறது... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

ஒன்றிணைந்த அதிமுக.. செங்கோட்டையன் சொல்வதே சரி.. ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன் ஆதரவு

news

பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும்.. இபிஎஸ்.க்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு!

news

வட இந்தியாவை உலுக்கி எடுக்கும் கன மழை.. துண்டிக்கப்பட்ட காஷ்மீர்.. தவிக்கும் மக்கள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 05, 2025... நல்ல செய்தி தேடி வர போகுது

news

More Rains On the way: மக்களே உஷார்.. தமிழ்நாட்டில் .. 2 நாட்களுக்கு.. மழை வெளுக்க போகுதாம்

news

அதிமுக பொதுச் செயலாளராக.. எடப்பாடி பழனிச்சாமி தேர்வுக்கு.. எதிரான மனு தள்ளுபடி

news

Vijay gets ready for Tamil Nadu Tour: அரசியல் அதிரடிக்கு தயாராகும் விஜய்.. அடுத்த மூவ் இது தான்!

news

அடுத்தடுத்து வெளியேறும் கட்சிகள், உட்கட்சி குழப்பம்.. பலம் இழக்கிறதா அதிமுக-பாஜக கூட்டணி?

அதிகம் பார்க்கும் செய்திகள்