2 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 09, 2025... இன்று நல்ல நேரம் தேடி வரும் ராசிக்காரர்கள்

Jul 09, 2025,10:57 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஜூலை 09 ம் தேதி, புதன்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆனி 25ம் தேதி புதன்கிழமை

அதிகாலை 01.32 வரை திரியோதசி திதியும் பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. காலை 04.35 வரை கேட்டை நட்சத்திரமும், அதன் பிறகு மூலம்  நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 04.35 வரை சித்தயோகமும், பிறகு 05.57 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


சந்திராஷ்டமம் -  பரணி, கிருத்திகை


இன்றைய ராசிபலன் :


மேஷம் - வேலை செய்பவர்களுக்கு வேலை அதிகமாக இருக்கும். தம்பதிகள் வெளியூர் பயணம் செய்வீர்கள். மார்க்கெட்டிங் வேலை செய்பவர்கள் நிறைய ஆர்டர்கள் பெறுவீர்கள். பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும். உடல்நலம் சரியாகும். வண்டி ஓட்டும் போது செல்போன் பேச வேண்டாம்.


ரிஷபம் - ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். வாக்குவாதம் செய்ய வேண்டாம். உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையாக இருக்க வேண்டும். 


மிதுனம் - நீண்ட நாட்களாக இருந்த குடும்ப பிரச்சனைகள் தீரும். மார்க்கெட்டிங் வேலை செய்பவர்கள் இலக்கை அடைய கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும். வாங்கிய கடனில் கொஞ்சம் அடைத்து விடுவீர்கள். சாப்பாட்டில் கவனமாக இருப்பது நல்லது. வீட்டு சாப்பாடு சாப்பிடுவது நல்லது. 


கடகம் - பெண்கள் நீண்ட நாட்களாக நினைத்ததை செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த துணி மற்றும் நகைகள் வாங்குவீர்கள். வேலை செய்பவர்களுக்கு கூட வேலை செய்பவர்கள் உதவி செய்வார்கள். வக்கீல்கள் வெற்றி பெறுவார்கள். உடல்நலம் தேறும். 


சிம்மம் - புது வண்டி வாங்க திட்டம் போடுவீர்கள். ரியல் எஸ்டேட் மற்றும் கமிஷன் தொழிலில் நல்ல பணம் பார்ப்பீர்கள். தம்பதிகளுக்குள் அன்பு அதிகரிக்கும். சொந்தக்காரர்கள் வந்து போவார்கள். மார்க்கெட்டிங் வேலை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உடல் நலம் மேம்படும். 


கன்னி - பெரியவர்களின் உடல் நலத்தை கவனித்துக் கொள்வது நல்லது. மருத்துவ செலவு வரும். பணம் வர கொஞ்சம் தாமதமானாலும் சம்பளம் வந்து சேரும். நண்பர்களால் நன்மை உண்டு. பழைய வீட்டை சரி செய்வீர்கள். வியாபாரிகள் முதலீடு செய்து லாபம் பார்ப்பார்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போவார்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.


துலாம் -   உங்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் உண்மையாக இருப்பார்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விவசாய பொருட்களுக்கு விலை அதிகரிக்கும். பெண்களுக்கு நல்ல செய்திகள் வரும். வண்டி ஓட்டும் போது கவனமாக ஓட்ட வேண்டும். உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். மார்க்கெட்டிங் வேலை செய்பவர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும். 


விருச்சிகம் - வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். வாடிக்கையாளர்களிடம் கோபமாக பேச வேண்டாம். தம்பதிகளுக்குள் அன்பு அதிகரிக்கும். வெளியாட்களுடன் பழக்கம் அதிகமாகும். தொழிலில் கவனக்குறைவு நீங்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு வரும். விட்டுக்கொடுத்து போவது நல்லது. பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். பணம் அதிகமாக வரும். 


தனுசு -  புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். கணவன் மனைவிக்குள் நல்ல விவாதங்கள் வரும். ஜோதிடம் மற்றும் கவுன்சிலிங் செய்பவர்களுக்கு வேலை அதிகமாகும். வியாபாரம் நன்றாக நடக்கும். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். 


மகரம் - ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்பவர்கள் லாபம் பார்ப்பார்கள். கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள். உடல் வலிமை பெறும். நண்பர்களை சந்திப்பதால் சந்தோஷம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வெளியூர் பயணம் போக திட்டம் போடுவீர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். 


கும்பம் -  உடல் ஆரோக்கியம் மேம்படும். பல் வலி, மூட்டு வலி வந்து போகும். வேலை செய்பவர்களால் உதவி கிடைக்கும். தம்பதிகளுக்குள் அன்பு அதிகரிக்கும். உங்கள் பகுதியில் மரியாதை கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் நல்லபடியாக முடியும். சிலருக்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் நடக்கும். 


மீனம் - தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வார்கள். சொந்தக்காரர்கள் வருவார்கள். வியாபாரத்தில் பழைய வேலை செய்பவர்களை மாற்றுவீர்கள். சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். காதல் பொறுமையை தரும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் செய்வீர்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்விதான் ஒருவரின் நிலையான சொத்து... மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!

news

திருப்பூரில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்!

news

Are you Ok?.. கேட்டதுமே அழுது விட்ட ஜனனி பொற்கொடி.. ஒரு நெகிழ்ச்சிக் கதை... say bye to STRESS!

news

குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

news

கொத்தவரங்காய் துவையல்.. ஈஸியா பண்ணலாம்.. சூப்பர் டேஸ்ட்டியா இருக்கும்!

news

அத்தையுடன் தவறான உறவு.. இளைஞரை அடித்து உதைத்த உறவினர்கள்.. கடைசியில் நடந்த டிவிஸ்ட்!

news

இந்திய நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு.. ஜூலை 16ல் ஏமனில் மரண தண்டனை?.. கவலையில் குடும்பம்!

news

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்: ஏறிய வேகத்தில் இறங்கியது தங்கம் விலை!

news

அதிகரித்து வரும் காற்று மாசு.. திக்கித் திணறும் தலைநகர் டெல்லி.. கவலையில் மத்திய அரசு!

அதிகம் பார்க்கும் செய்திகள்