தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 09 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஆவணி 24ம் தேதி செவ்வாய்கிழமை
இரவு 08.54 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. இன்று இரவு 09.07 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.03 வரை சித்தயோகமும், பிறகு இரவு 09.07 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 01.45 முதல் 02.45 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
சந்திராஷ்டமம் - மகம், பூரம்
மேஷம் - மேஷம் ராசிக்காரர்களுக்கு வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வங்கியில் பணம் டெபாசிட் செய்வது அதிகரிக்கும். வியாபாரிகள் அதிக லாபம் பெற முயற்சி செய்ய வேண்டும். யோகா மற்றும் நடன வகுப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். மாணவர்களின் எண்ணங்கள் நிறைவேறும்.
ரிஷபம் - ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பெண்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். திருமணத்திற்கு தேவையான ஆடைகள், நகைகள் வாங்குவீர்கள். ஏதேனும் ஒரு வழியில் பணம் வரும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் பெரிய பதவிகள் கிடைக்கும். வேலையில் நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். பெண்களின் திருமண கனவு நிறைவேறும்.
மிதுனம் - மிதுனம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டம் போடுவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வேலையில் சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கும். அலுவலகத்தில் நிம்மதி ஏற்படும். சகோதர, சகோதரிகள் உதவியாக இருப்பார்கள்.
கடகம் - கடகம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் பெரியவர்களை மதிப்பது நல்லது. வேலைக்கான அழைப்பு வரும். வேலையாட்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கமிஷன், புரோக்கரேஜ் மூலம் பணம் வரும். தடைகள் நீங்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.
சிம்மம் - சிம்மம் ராசிக்காரர்களுக்கு இன்று மகம், பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். அதனால் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்க வேண்டாம். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் நல்ல காரியங்களை ஆரம்பிக்கலாம். புதிய முயற்சிகள் செய்யலாம்.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த பணம் வரும். விரும்பியவரை திருமணம் செய்வீர்கள். நினைத்த காரியம் வெற்றி பெறும். தம்பதியினருக்கு அன்பு அதிகரிக்கும். பெற்றோரின் உடல் நிலையை கவனிப்பது நல்லது. மாணவர்கள் நன்றாக படிப்பார்கள். செலவுகளை குறைக்கவும். கை, கால் வலி வந்து போகும்.
துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு இரும்பு வியாபாரம் செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். காதலில் சந்தேகம் வரலாம். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது நல்லது. மாணவர்கள் ஆசிரியர்களிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். தம்பதிகளின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். காதல் இனிக்கும். பேச்சாளர்களுக்கு பாராட்டும், மதிப்பும் கூடும்.
விருச்சிகம் - விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு வேலை செய்பவர்களுக்கு கேட்ட இடத்தில் இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு கௌரவப் பதவிகள் கிடைக்கும். உயர்கல்வியில் ஆர்வம் உண்டாகும். மகான்கள், மனைவியின் சொல்லை கேட்பவர்களாக இருப்பீர்கள். சித்தர்களின் ஆசி கிடைக்கும். வெளிநாட்டு நண்பர்கள் உதவுவார்கள். செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக இருக்க வேண்டும்.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். பெற்றோருடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். புதிய வாகனம் வாங்குவது தள்ளிப் போகலாம். உங்களைப் பற்றி வதந்திகள் பரவும்.
மகரம் - மகரம் ராசிக்காரர்களுக்கு வேலையில் நிதானம் தேவை. வேகத்தை குறைப்பது நல்லது. குடும்பத் தலைவிகள் சிக்கனமாக இருப்பீர்கள். மகளுக்கு திருமணம் நடக்கும். பணம் அதிகமாக வரும். வீடு, மனை வாங்குவது உங்கள் விருப்பப்படி நடக்கும். வருமானம் அதிகரிக்கும். குழந்தைகள் விளையாடும்போது காயம் ஏற்படலாம். கவனம் தேவை.
கும்பம் - கும்பம் ராசிக்காரர்களுக்கு உறவினர்கள் வருவார்கள். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். காதல் வரும். பிள்ளைகள் பெற்றோரை மதிப்பார்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். வெளியூரில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
மீனம் - மீனம் ராசிக்காரர்களுக்கு புதிய தொழில் நுட்ப கருவிகளை வாங்குவீர்கள். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. வயிறு சம்பந்தமான உபாதைகள் வரலாம். உணவில் கவனம் தேவை. பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நேரம். கலைஞர்களுக்கு பணம் வந்து சேரும். பெண்கள் செலவுகளை குறைப்பார்கள்.
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நா ளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
Kodumudi Brahma temple: கொடுமுடி பிரம்மா சன்னதியும், வன்னி மரத்தின் சிறப்புகளும்!
நேபாளத்தில் ஓயாத அமளி.. அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா.. அரசு கவிழ்கிறதா?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
தொடர் புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து சவரன் ரூ.81,000த்தை கடந்தது!
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
{{comments.comment}}