12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 11, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Apr 11, 2025,11:15 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ம் தேதி, வெள்ளிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், பங்குனி 28ம் தேதி வெள்ளிக்கிழமை

பங்குனி உத்திரம். சுபமுகூர்த்த நாள். அதிகாலை 02.33 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. மாலை 04.11 வரை உத்திரம் நட்சத்திரம், பிறகு அஸ்தம் நட்சத்திரம் உள்ளது. காலை 06.05 வரை மரணயோகம், பிறகு மாலை 04.11 வரை சித்தயோகம், அதற்கு பிறகு அமிர்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 04.30 முதல் 05.40 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


சந்திராஷ்டமம் -  அவிட்டம், சதயம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - குடும்பத்தில் இருந்த வந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமின்றி முடியும். வாகன பராமரிப்பு செலவு உண்டாகும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த பண வரவு உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு ஏற்படும். வியாபாரம் சிறப்பாக அமையும். போட்டியான நாள்.


ரிஷபம் - பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வேலை தொடர்பான அலைச்சல் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பாக செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் விழிப்புணர்வு தேவை. பெருமையான நாள். 


மிதுனம் - உறவுகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய வேலைகள் சாதகமாக அமையும். குழந்தைகள் வழியில் அலைச்சல் ஏற்படும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். மன அமைதி ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.


கடகம் - எதையும் சமாளிக்கக் கூடிய சாமர்த்தியம் பிறக்கும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். அலுவலகத்தில் நெளிவ சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். சவாலான வேலைகளை சாதாரணமாக முடிப்பீர்கள். 


சிம்மம் - பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பயணத்தால் லாபம் அடைவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். குடும்ப உறுப்பினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் மாற்றம் ஏற்படும். நன்மை நிறைந்த நாளாக இருக்கும்.


கன்னி - உடன் இருப்பவர்களால் புதிய அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் தோன்றி மறையும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். அலுவலக பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும். பக்தி நிறைந்த நாளாக இருக்கும்.


துலாம் -  மறைமுகமான வருமானங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். காலம் தவறிய உணவுகளை தவிர்ப்பத நல்லது. சமூகம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிக சிந்தனைகள் அதிகரிக்கும். மனம் விட்டு பேசுவதால் தெளிவு பிறக்கும். முயற்சிகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும்.


விருச்சிகம் - பண வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆரோக்கியம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த பயணங்களால் அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் சாதகமான சூழல் ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள்.


தனுசு - குடும்பம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கடினமான வேலைகளை எளிதில் செய்த முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். மனதில் இருந்து வந்த சஞ்சலங்கள் குறையும். சுபகாரிய ஏற்பாடுகளை மேற்கொள்வீர்கள். பெரியோர்களின் சந்திப்பால் மாற்றம் ஏற்படும். பயம் விலகும் நாளாக இருக்கும்.


மகரம் - பணவரவு தாமதமாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். குடும்பத்தில் மதிப்பு உயரும். மனதளவில் தன்னம்பிக்கை பிறக்கும். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கம். அக்கம் பக்கத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்வான நாளாக இருக்கும்.


கும்பம் -  வேகத்தை விட விவேகத்துடன் இருப்பது நல்லது. வரவை விட செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் சகிப்பு தன்மையுடன் செயல்படவும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும்.


மீனம் - குடும்பத்தில் சிக்கனத்தை கடைபிடிக்கவும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாளாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்க.. புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.. மெட்டா நிறுவனம்

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!

news

காஷ்மீர் beautiful காஷ்மீர்.. தீவிரவாதிகள் சீரழிக்க நினைக்கும் காஷ்மீரின் பேரெழிலும் இயற்கை அழகும்!

news

ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் வேரறுப்போம்.. பிரதமர் மோடி ஆவேசம்

news

கும்பகோணத்தில் விரைவில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

news

தினமும் உடற்பயிற்சி.. ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அட்வைஸ்!

news

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்!

news

பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கம் அதிரடி முடக்கம்.. மத்திய அரசு நடவடிக்கை..!

அதிகம் பார்க்கும் செய்திகள்