12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மே 12, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

May 12, 2025,10:00 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு மே 12 ம் தேதி, திங்கட்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், சித்திரை 29 ம் தேதி திங்கட்கிழமை

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல், சித்ரா பவுர்ணமி. இரவு 10.44 வரை பவுர்ணமி திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. காலை 06.48 வரை சுவாதி நட்சத்திரம், பிறகு விசாகம் நட்சத்திரம் உள்ளது. காலை 05.53 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.48 வரை அமிர்தயோகம், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 06.30 முதல் 07.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : 09.30 முதல் 10.30 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


சந்திராஷ்டமம் -  உத்திரட்டாதி, ரேவதி


இன்றைய ராசிபலன் :




மேஷம் - இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாளாக அமைகிறது. ஆதலால், யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பொதுவாக இன்று அமைதி காப்பது நல்லது. இறைவனை மட்டும் வழிபடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.


ரிஷபம் - உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். நவீன பொருட்களின் செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத மனபயம் விலகும். திருமணம் கோலாகரமாக நடக்கும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும்.


மிதுனம் - நினைத்த காரியம் நிறைவேறும். விசா கிடைத்து வெளிநாடு செல்வர். தேகம் பளிச்சிடும். பெண்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கிவிடுவர். கொடுக்கல் வாங்கல் சுமூகமாக செல்லும். அலுவலகத்தில் சற்று வேலை பளு அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு புது பதவி கிடைக்கும். 


கடகம் - தம்பதியரிடையே வாக்குவாதம் வந்து போகும். அமைதியை காத்தால் தப்பிக்க முடியும். கொடுக்கல் வாங்கலில் கறாராக இருங்கள். பிள்ளை நன்கு படிப்பர். உணவு விசயத்தில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் அவசியம். காய்கறி வியாபாரிகள் பயனடைவர்.


சிம்மம் - பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். நட்பால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். கலைத்துறையினர் வெளிநாடு செல்வர். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.


கன்னி - ஆன்மீக செலவுகளுக்கும் இடம் உண்டு. பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து வர வேண்டிய சொத்து, பணம், நகை வந்து சேரும். அவசர தேவைக்காக வாங்கிய கடனை அடைப்பீர்கள். ஆடல், பாடல் கலைத் துறையினருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் தரும்.


துலாம் -  புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்கள் உதவுவர். மனைவி உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அமைதியை கையாளவும்.


விருச்சிகம் - எதிரிகள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பர். பிரிந்திருந்த தம்பதிகள் இணைவர். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் நலம் விசாரிப்பர். சேமிப்பு உயரும். உடல் நலத்தில் கவனம் தேவை.


தனுசு - வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் பெருகும். உடல் நலம் தேறும். பணப் புழக்கம் அதிகரிக்கும். புது ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மாணவர்களின் அலட்சியபோக்கு நீங்கும். உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித்தனத்தை பாராட்டுவார்கள்.


மகரம் - நம்பிக்கைக்குரியவரை சந்தித்து எதிர்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். சிலருக்கு புது இடத்தில் வேலை கிடைக்கும்.


கும்பம் -  உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். இன்று இழுபறியாக இருந்த வேலைகள் முடிந்துவிடும். உறவினர்களால் நன்மை உண்டு. நண்பர்கள் கைக் கொடுப்பர். வழக்கறிஞர்கள் சுபிட்சம் அடைவர். அரசியலில் நாட்டம் கூடும். முகம் புதுப்பொலிவு கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும்.


மீனம் - உத்யோகஸ்தர்களுக்கு வெளியூர் மாற்றலாவர். உடல் நலம் தேறும். பயணங்களின் போது கவனம் தேவை. வியாபாரம் சாதகமாக இருக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வெறுத்துச் சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்