தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு மே 13 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
விசுவாவசு வருடம், சித்திரை 30 ம் தேதி செவ்வாய்கிழமை
இன்று நாள் முழுவதும் பிரதமை திதி உள்ளது. காலை 09.19 வரை விசாகம் நட்சத்திரம், பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. காலை 09.19 வரை மரணயோகமும், பிறகு காலை சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : 10.30 முதல் 11.30 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
சந்திராஷ்டமம் - ரேவதி, அஸ்வினி
இன்றைய ராசிபலன் :
மேஷம் - உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கியமான நபர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ய்புள்ளதால் கவனம் தேவை.
ரிஷபம் - தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள். செலவுகளைக் குறைக்கவும். வேலைச்சுமை இருக்கும். புதிய அனுபவம் உண்டாகும். திடீர் பணவரவு உண்டு. சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.
மிதுனம் - குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் போக்கே சென்று அவர்களை உங்கள் வழியில் வரவழையுங்கள்.
கடகம் - மனைவியிடம் ஆத்திரப்படாதீர்கள். அரசியல்வாதிகள் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். உடல் உற்சாகத்துடன் காணப்படும். இரும்பு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம்.
சிம்மம் - தம்பதியரிடையே அன்பு அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட டெண்டர்களில் வெற்றி நிச்சயம். வாகனம் ஓட்டும் போது ஆவணங்களை வைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்குவது நல்லது.
கன்னி - வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாண்டு அதிக லாபம் ஈட்டுவீர்கள். மகான்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.
துலாம் - வியாபாரிகளுக்கு கடன் பிரச்சினை தீரும். பெரியவர்களின் ஆலோசனைக்கு மதிப்புக் கொடுங்கள். பணவரவில் தாமதம் இல்லை. வீட்டில் நிம்மதி கிடைக்கும். பெற்றோரின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள்.
விருச்சிகம் - பெண்கள் பேசும் போது கவனம் தேவை. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். திருமண பேச்சு வார்த்தை சுபமாக முடியும். வெளியூர் பயணம் தள்ளிப் போகும். விவசாயிகளுக்கு கேட்ட கடன் தொகை கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.
தனுசு - அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். மார்கெட்டிங் பிரிவினர் புது ஆர்டர்கள் எடுப்பீர்கள். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம். வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.
மகரம் - தாயாரின் உடல் நலம் சீராகும். அரசியலில் செல்வாக்கு உயரும். அலைச்சல் அதிகரிக்கும். சில முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும்.
கும்பம் - செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தி வந்து சேரும். பணவரவு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். பெண்கள் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கவும்.
மீனம் - அரசியல்வாதிகளுக்கு புகழ் உயரும். காதலர்களுக்குள் வாக்குவாதம் வந்து செல்லும். பங்கு சந்தையில் நிதானமுடன் செயல்படவும். பிரபலமானவர்களால் நன்மை உண்டு. தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உடல் நலம் சிறக்கும்.
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}