தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு மே 15 ம் தேதி, வியாழக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
விசுவாவசு வருடம், வைகாசி 01 ம் தேதி வியாழக்கிழமை
அதிகாலை 02.00 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. பகல் 01.24 வரை கேட்டை நட்சத்திரம், பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் : 12.30 முதல் 01.30 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 03.00 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
சந்திராஷ்டமம் - பரணி, கிருத்திகை
இன்றைய ராசிபலன் :
மேஷம் - குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து, தேவையான செலவுகளை மட்டும் செய்யுங்கள். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கவலைகள் வரலாம். திருமண பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக முடியும். மகான்கள் மற்றும் சித்தர்களின் ஆசி கிடைக்கும்.
ரிஷபம் - இன்று கிருத்திகை மற்றும் ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவையற்ற மனக்குழப்பங்கள் வரலாம். இறைவனை பக்தியுடன் கும்பிடுவது நல்லது. தியானம் செய்வது நல்லது.
மிதுனம் - நீங்கள் விரும்பிய வீடு கட்ட வங்கியில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். சுப காரியங்கள் நடக்கும். நண்பர்களிடம் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தெய்வீக பணிகளில் ஈடுபடுவீர்கள். ஷேர்களில் பணம் போட இது ஏற்ற தருணம்.
கடகம் - நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். நினைத்த காரியம் வெற்றி பெறும். வெளியூர் செல்லும் திட்டங்கள் மாறலாம். வேலையில் இருப்பவர்களுக்கு அதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். வாகனத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும்.
சிம்மம் - நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களைத் தேடி வந்து பேசுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தம்பதிகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
கன்னி - வெளியூர் பயணம் வெற்றி தரும். கணவன் மனைவி மனம் விட்டு பேசி சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். உடல்நிலை நன்றாக இருக்கும். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும். கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
துலாம் - மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பழுதாகி இருந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பொதுநலத் தொண்டர்களுக்கு பெரிய பதவிகள் கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்லவும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம் - தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வார்கள். சிறு வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். பெரிய விஷயங்கள் சட்டென்று முடியும். பணம் திருப்திகரமாக இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வார்கள். கை, கால் வலி வந்து போகும்.
தனுசு - தந்தை வழி சொத்து கைக்கு வரும். வியாபாரத்தில் பணம் அதிகரிக்கும். வியாபாரம் லாபகரமாக செல்லும். வெளிநாட்டு தொடர்பால் நன்மைகள் ஏற்படும். கல்யாணம் மற்றும் கிரகப் பிரவேசத்தில் முதல் மரியாதை கிடைக்கும். கடன் அன்பை முறிக்கும். எனவே கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
மகரம் - அலுவலகத்திற்கு தேவையான கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். பெண்கள் சுயதொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளுங்கள். வேலையில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்து போவது நல்லது. ஆவணங்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
கும்பம் - பூர்வீக சொத்து விஷயத்தில் ஒரு திருப்பம் ஏற்படும். வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள். பெண்கள் விலை குறைந்த பொருட்களை வைத்து வீட்டை அழகாக அலங்கரிப்பீர்கள். திடீர் பயணங்கள் வரலாம். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மதிப்பார்கள். மாணவர்கள் காதலில் சிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது.
மீனம் - வீடு கட்ட கடன் கிடைக்கும். காதல் கசக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புவார்கள். விற்பனையாளர்கள் சாதுர்யமாக பேசி விற்பனையை அதிகரிப்பார்கள். குடும்பத்துடன் வெளிநாடு சுற்றிப் பார்க்க திட்டமிடுவீர்கள்.
பொள்ளாச்சி வழக்கில்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க.. முதல்வர் உத்தரவு..!
என் குழந்தைகள் என் உயிர்.. என்னிடமிருந்து பிரிக்க முயன்றார்கள்.. நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு..பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்ய வேண்டாம்...ஆப்பிள் சிஇஓ.,க்கு டிரம்ப் உத்தரவு
cyclone shakthi பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்...புயல் காற்றுடன் மழை வெளுக்க போகுதாம்
இந்தியாவில் அமலுக்கு வந்தது.. பயோ மெட்ரிக் விவரங்கள் அடங்கிய இ-பாஸ்போர்ட்..!
தொழிற்சாலையில் டேங்க் வெடிப்பு.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்!
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின்.. kissa47 பாடல் நீக்கம்.. படக்குழு அறிவிப்பு!
வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தங்கம் விலை... சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1560 குறைவு!
{{comments.comment}}