12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 16, 2025... இன்று நன்மைகள் தேடி வரும் ராசிக்காரர்கள்

Jul 16, 2025,10:21 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஜூலை 16 ம் தேதி, புதன்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆனி 32ம் தேதி புதன்கிழமை

தேய்பிறை சஷ்டி. சுபமுகூர்த்த நாள். இரவு 08.43 வரை சஷ்டி திதியும் பிறகு சப்தமி திதியும் உள்ளது. காலை 06.12 வரை பூரட்டாதி நட்சத்திரமும், அதன் பிறகு உத்திரட்டாதி  நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.59 வரை மரணயோகமும், பிறகு காலை 06.12 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


சந்திராஷ்டமம் -  ஆயில்யம், மகம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - குலதெய்வக் கோவிலுக்குச் செல்லுங்கள். சொத்து ஆவணங்களைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். நீங்கள் விரும்பும் கல்லூரி அல்லது பள்ளியில் சேர பெற்றோர்கள் சம்மதிப்பார்கள். நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாத உங்கள் பெற்றோர் உடல் நலம் பெறுவார்கள்.


ரிஷபம் - அலுவலகத்தில் நடக்கும் தந்திரங்களை முறியடிப்பீர்கள். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு முன்பணம் கிடைக்கும். திரைப்பட விநியோகஸ்தர்கள் கிடைப்பார்கள். விரைவில் உங்கள் படம் வெளியாகும். 


மிதுனம் - தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். வீட்டில் வேலை செய்பவர்கள் உண்மையாக இருப்பார்கள். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். பழைய வீட்டை சரி செய்வீர்கள். வியாபாரிகள் முதலீட்டை அதிகரிப்பார்கள். உடல் நலம் மேம்படும்.


கடகம் - பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். மனம் விட்டு பேசுவீர்கள். உடல் புது பொலிவு பெறும். கடன் தொல்லை தீரும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பார்கள். பணியாளர்களுக்கு வேலை அதிகமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். குழந்தைகளின் மீது கவனம் தேவை.


சிம்மம் - இன்று சந்திராஷ்டமம். அதனால் முக்கியமானவர்களை சந்திப்பதை தவிர்க்கவும். ஏனென்றால் சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாவது இடத்தில் இருக்கிறார். சுப காரியங்களை தள்ளிப் போடுவது நல்லது. இன்று கடவுளை வழிபடுவது நல்லது.


கன்னி - பணம் வர கொஞ்சம் தாமதமானாலும் சம்பளம் வந்து சேரும். நீங்கள் எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு சாதகமாகவே நடக்கும். பெண்கள் செலவுகளை சமாளிப்பார்கள். நட்பால் நன்மை உண்டாகும். வியாபாரம் செழிப்பாக இருக்கும். வெளிநாட்டு தொடர்பால் நன்மை ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள். உடல் வலிமை பெறும்.


துலாம் -   பணம் உங்கள் பாக்கெட்டில் நிறைய இருக்கும். விலை உயர்ந்த நகைகள் வாங்குவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். உறவினர்கள் வருவார்கள். அவர்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். 


விருச்சிகம் - வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்துவீர்கள். வேலையில் சலுகைகள் கிடைக்கும். தொலைந்து போன பொருள் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் முயற்சியால் முக்கியமான ஒரு வேலையை முடித்துக் காட்டுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி தரும். 


தனுசு -  புதிய திட்டங்களை மனதில் யோசிப்பீர்கள். வேலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று குடும்பத்துடன் ஷாப்பிங் மால் சென்று வருதல், திரைப்படம் பார்த்தல் போன்ற விஷயங்களில் நேரத்தை செலவிடுவீர்கள். தம்பதிகளிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். 


மகரம் - வியாபாரம் சூடு பிடிக்கும். பயணங்கள் அதிகரிக்கும். வேலை செய்பவர்களிடம் கோபப்படாதீர்கள். பிரபலமானவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். அவர்களால் நன்மைகள் உண்டாகும். திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்களை பார்த்து மகிழ்வீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.


கும்பம் -  வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக இருக்க வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உண்மையாக இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.


மீனம் - கொடுக்கல் வாங்கல் சீராக நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். நண்பர்கள் உங்களுக்கு விட்டு கொடுப்பார்கள். அவர்களாகவே உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்பார்கள். எண்ணெய் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். தம்பதிகளின் அன்பு அதிகரிக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்