12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 22, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Jan 22, 2025,10:21 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஜனவரி 22 ம் தேதி, புதன்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், தை 09 ம் தேதி புதன்கிழமை

பகல் 02.51 வரை அஷ்டமி, பிறகு நவமி. இன்று நாள் முழுவதும் சுவாதி நட்சத்திரம் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது அவசியம். மற்றவர்களிடம் உங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் போது கவனமுடன் இருக்க வேண்டும். தேவையற்ற பேச்சுக்கள் மன உளைச்சலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சூழ்நிலை அறிந்து கவனமாக நடந்து கொள்வது நல்லது. மனதில் குழப்பங்கள், வீண் சஞ்சலங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


ரிஷபம் - மனஅழுத்தத்திற்கு ஆளாவதை தவிர்க்க வேண்டும். மற்றவர்களிடம் உதவி கேட்க தயங்க வேண்டாம். பொறுப்புகளை தனியாக ஏற்க நினைத்து சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இன்று சேமிப்பை அதிகரிக்க புதிய வாய்ப்புகளை தேட முயற்சி செய்வீர்கள்.


மிதுனம் - இன்று மகிழ்ச்சியாக இருக்க நினைப்பீர்கள். நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். மனம் சோர்வு அடையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. எதிலும் நம்பிக்கையான போக்கு நன்மைகளை வழங்கும்.


கடகம் -  மனதில் தைரியம், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய நாள். மனதில் பலவிதமான விஷயங்களை யோசித்து மன அழுத்தத்திற்கு ஆளாவதை தவிர்க்க வேண்டும். புதிய முயற்சிகளை ஈடுபட சரியான சமயம். பணிச்சுமையை குறைக்க மற்றவர்களுடன் வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


சிம்மம் - புதிய மாற்றங்களை சந்திக்கக் கூடிய நாளாக இருக்கும். சில புதிய அனுபவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சுற்றி இருப்பவர்களை புரிந்து கொள்வீர்கள். பழைய அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, அதை எதிர்காலத்திற்காக பயன்படுத்த நினைப்பீர்கள்.


கன்னி - வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிகளை கண்டுபிடிப்பீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றி வைக்க நினைப்பீர்கள். உடல் நலம் குறித்து கவலைப்படுவீர்கள். பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் ஏற்படாது என்றாலும் தகுந்த ஓய்வு, சிகிச்சை ஆகியவற்றை எடுத்துக் கொள்வது நல்லது.


துலாம் - மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள். வழக்கமான பணிகளில் இருந்து விடுபட்டு ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. சில விஷயங்கள் மனதை சோர்வடைய செய்யலாம். பதற்றம் இல்லாமல் நிதானமாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.  


விருச்சிகம் - பணியிடத்தில் திட்டமிட்டபடி பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் பற்றிய தேவையற்ற கவலைகளை விடுவது நல்லது. சிலருக்கு வெளியூர் பயணம் சென்று வர வாய்ப்புள்ளது. மனதில் நம்பிக்கை அதிகரிக்கும்.


தனுசு - புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். மற்றவர்களுக்காக உங்களின் நேரத்தை வீணாக்கிக் கொள்ள வேண்டாம். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்காது. புதிய முயற்சிகள் வெற்றி அடையும். இதனால் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.


மகரம் -  அலுவலகத்தில் உயர் பதவியில் இருப்பவர்களை சந்திக்க நேரிடும். மனதிற்கு பிடித்தவர்களுடன் வெளியில் சென்று வர நினைப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.


கும்பம் - வாழ்க்கை துணையின் மனம் அறிந்து நடந்து கொள்வீர்கள். அவருக்கு விருப்பமான பொருட்களை வாங்கிக் கொடுத்து அவரை மகிழ்விக்க நினைப்பீர்கள். இருப்பினும் வார்த்தைகளில் நிதானம் வேண்டும். எதிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. 


மீனம் - வீட்டில் விருந்தினர்கள் வருகையால் உற்சாகம் அதிகரிக்கும். சோம்பல் காரணமாக வழக்கமான பணிகளில் மாற்றம் ஏற்படலாம். புதிய அனுபவங்கள் ஏற்படலாம். இருப்பினும் குழப்பமான செயல்பாடுகளால் மனதில் சோர்வு ஏற்படலாம். வாழ்க்கை துணை மீதான அன்பு அதிகரிக்கும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

news

ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு

news

ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்

news

ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

news

அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக

news

விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்

news

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை

news

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்

news

தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்