தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜூலை 23 ம் தேதி, புதன்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஆடி 07ம் தேதி புதன்கிழமை
மாத சிவராத்திரி. அதிகாலை 03.57 வரை திரியோதசி திதியும் பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. மாலை 06.51 வரை திருவாதிரை நட்சத்திரமும், அதன் பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 6 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
சந்திராஷ்டமம் - அனுஷம், கேட்டை
மேஷம் - மேஷ ராசியினர் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். மருத்துவ செலவுகள் வரலாம். உடல் நலத்தில் கவனம் தேவை. புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும். கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும். புரமோஷன் மற்றும் டிரான்ஸ்பர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ரிஷபம் - ரிஷப ராசியில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். புதிய தொழில் தொடங்கலாம். புதுமண தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர். மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல திட்டமிடுவர். அதற்கான வேலைகளை இன்று ஆரம்பிப்பர்
மிதுனம் - மிதுன ராசியில் தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். கண்ணாடி அணிய வேண்டியது வரலாம். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல கமிஷன் கிடைக்கும்.
கடகம் - கடக ராசியில் குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உடல் நலம் சரியாகும். பணப்பொறுப்புக்களை கையாளுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு புதிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். விற்க முடியாத காலி மனையைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவர்.
சிம்மம் - சிம்ம ராசியில் குழந்தை பாக்கியம் எதிர்பார்த்திருப்பவர்கள் வீட்டில் விரைவில் மழலை சத்தம் கேட்கும். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். உங்களுக்குரிய பங்குத் தொகை வந்து சேரும்.
கன்னி - கன்னி ராசியில் நண்பர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம். வெளியூர் டிரான்ஸ்பர் கிடைக்கும். பெண்கள் தங்கள் தோழிகளிடம் மனம்விட்டு பேச நேரம் கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பதவி உயர்வு பற்றி செய்திகள் வரும். தேகம் பளிச்சிடும்.
துலாம் - துலாம் ராசியில் மகன் மகளுக்கு வசதியான இடத்தில் இருந்து நல்ல சம்பந்தம் கூடிவரும். மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் அதிக முயற்சியின் பேரில் இடம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வழக்கு சம்பந்தமாக சற்று விட்டுக் கொடுத்து சமாதானமாக போவது நலம் தரும்.
விருச்சிகம் - விருச்சிக ராசியில் இன்று காரிய தடைகள் ஏற்படும். சந்திராஷ்டமம் உள்ளதால் மிகவும் கவனம் தேவை. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவையற்ற மனக் குழப்பங்கள் மற்றும் சங்கடங்கள் தோன்றலாம். மிகவும் கவனம் தேவை. இறைவனை வழிபட்டு காரியத்தை துவங்கவும்.
தனுசு - தனுசு ராசியில் உத்யோகம் சாதகமாக இருக்கும். உங்கள் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அதே நேரம் வேலைச்சுமையும் அதிகரிக்கும். சிகிச்சையில் இருப்பவர்கள் பூரண குணம் அடைவார்கள். பல முக்கிய இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இன்று நிறைவேறும்.
மகரம் - மகர ராசியில் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். குடும்பத்தை பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள். வியாபாரம் சீராக இருக்கும். உத்யோகம் தாங்கள் விரும்பியபடி திருப்திகரமாக செல்லும். அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும்.
கும்பம் - கும்ப ராசியில் பழைய கடன்கள் அடைபடும். சரியான வேலை அமையாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது. தந்தையின் சொல்லுக்கு செவி சாய்ப்பது நலம் தரும். சொந்த பிளாட், நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை கூடி வரும்.
மீனம் - மீன ராசியில் பெரிய மனிதர்கள், உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு, ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் நிறை குறைகள் இருக்கும். அனுசரிப்பது நல்லது. மாமனார் உடல்நலம் பாதிக்கப்படலாம். மாணவர்கள் மேற்படிப்புக்காக கடல் கடந்து செல்லும் யோகம் உள்ளது. அக்கம் பக்கத்தினர்களிடம் அளவோடு பழகுவது நல்லது.
மக்களே உஷார்... இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலைம மையம்!
குடியரசுத் துணைத் தலைவர் பதவி.. பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை நிறுத்த பாஜக திட்டம்?
மருத்துவமனையில் இருந்தபடியே.. கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
TNPSC குரூப் 4 தமிழ்ப் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்: அண்ணாமலை
தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் ரவி மோகனுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!
Indoor and Outdoor plant.. மணி பிளான்ட்:.. மணி மணியா வளர்க்கலாம்.. அழகா இருக்கும்!
தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: உரிமை மீட்க... தலைமுறை காக்க... இலட்சினையை வெளியிட்டது பாமக!
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... மதுரை ஆதினத்தை துன்புறுத்தக்கூடாது: அண்ணாமலை
வானில் ஒரு அதிசயம்.. ஆனால் வரும் ஆகஸ்ட் மாதம் இல்லையாம்.. 2027ல்தான் நடக்கப் போகுதாம்!
{{comments.comment}}