தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜூலை 25 ம் தேதி, வெள்ளிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஆடி 09ம் தேதி வெள்ளிக்கிழமை
ஆடி 2வது வெள்ளி. அதிகாலை 01.08 வரை அமாவாசை திதியும் பிறகு பிரதமை திதியும் உள்ளது. மாலை 05.57 வரை பூசம் நட்சத்திரமும், அதன் பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.54 வரை அமிர்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
சந்திராஷ்டமம் - மூலம், பூராடம்
மேஷம் - பேச்சு திறமையால் பங்குதாரர்களை சரி செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வேலையில் சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். அலுவலகத்தில் நிம்மதி இருக்கும். சகோதர, சகோதரிகள் உதவியாக இருப்பார்கள்.
ரிஷபம் - தம்பதிகளுக்கு அன்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலை அழைப்பு வரும். வேலையாட்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் கூடும். கமிஷன், புரோக்கரேஜ் மூலம் பணம் வரும். தடைகள் நீங்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள்
மிதுனம் - பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியர்களிடம் நல்ல பெயர் எடுப்பார்கள். நாத்தனார் உறவு மேம்படும். யோகா, தியானத்தில் மனம் ஈடுபடும். கணவன் - மனைவி பிரச்சனைகள் தீரும். வியாபாரம் லாபகரமாக இருக்கும்.
கடகம் - வெளியில் மதிப்பு, மரியாதை கூடும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். புதிய தொழில் நுட்ப கருவிகள் வாங்குவீர்கள்.
சிம்மம் - வெளிநாட்டு நண்பர்கள் உதவுவார்கள். உயர்கல்வியில் ஆர்வம் உண்டாகும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும். மாணவர்கள் நினைத்தது நடக்கும். சிக்கனமாக இருக்க வேண்டும். சிலருக்கு கௌரவப் பதவி கிடைக்கும்.
கன்னி - ஆரோக்கியம் மேம்படும். கம்ப்யூட்டர் துறையில் வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். தம்பதிகளுக்குள் அன்பு அதிகரிக்கும். காதல் இனிக்கும். பேச்சாளர்களுக்கு பாராட்டு கிடைக்கும். மார்க்கெட்டிங் துறையினருக்கு இலக்கு நிறைவேறும்.
துலாம் - வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வங்கியில் டெபாசிட் அதிகரிக்கும். வியாபாரிகள் அதிக லாபம் பெற முயற்சி செய்ய வேண்டும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பொறுமை அவசியம். யோகா, நடன வகுப்புகளில் ஆர்வம் ஏற்படும்.
விருச்சிகம் - பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. வருமானம் உயரும். குழந்தைகள் விளையாடும்போது கவனம் தேவை. எதிர்க் கட்சியினர் பாராட்டுவார்கள். மகளுக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.
தனுசு - இன்று மூலம், பூராடம் நட்சத்திரக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மனக்குழப்பம் வரலாம். இறைவனை பக்தியுடன் கும்பிடவும். தியானம் செய்வது நல்லது.
மகரம் - தம்பதிகளுக்குள் வாக்குவாதம் வரலாம். பெண்கள் செலவுகளைக் குறைக்கவும். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் கிடைக்கும். குழந்தைகளின் உடல் நலனில் அக்கறை தேவை. கலைஞர்களுக்கு பணம் வந்து சேரும்.
கும்பம் - திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். பெற்றோருடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழுதான வாகனம் சரியாகும். உங்களைப் பற்றி தவறான செய்திகள் பரவும். பொது இடங்களில் பேசும்போது கவனம் தேவை. தம்பதிகளுக்குள் அன்பு அதிகரிக்கும். நட்பு வட்டம் விரிவடையும்.
மீனம் - வாராக் கடன் வந்து சேரும். நினைத்த காரியம் வெற்றி பெறும். தம்பதிகளுக்குள் அன்பு அதிகரிக்கும். பெற்றோரின் உடல் நிலையை கவனிக்கவும். வீட்டுச் செலவுகளைக் குறைக்கவும். முதுகு வலி வரலாம்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}