தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ம் தேதி, சனிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஐப்பசி 08 ம் தேதி சனிக்கிழமை
வளர்பிறை சதுர்த்தி. இன்று நாள் முழுவதும் சதுர்த்தி திதி உள்ளது. காலை 07.08 வரை அனுஷம் நட்சத்திரமும், பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
சந்திராஷ்டமம் - அஸ்வினி, பரணி

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால், தொழில் சார்ந்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சாதாரணப் பேச்சு கூட பிரச்சனையாக மாறி, நிரந்தரமாகப் பேசாமல் போகும் வாய்ப்புள்ளது. எனவே, கவனத்துடன் செயல்பட வேண்டும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் சீராக இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக நடக்கும். பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். உடல் நலத்தில் சத்துள்ள உணவுகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. இவர்களது அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு அலுவலக வேலைகள் சுலபமாக முடியும். குடும்பத் தலைவிகளுக்கு குடும்ப உறவுகளில் நிம்மதியான சூழல் நிலவும். உடலில் பொலிவும் உற்சாகமும் அதிகரிக்கும். ஆன்லைன் வியாபாரம் செழிக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. மாமியார் வீட்டார் உதவி செய்வார்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் பச்சை.
கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு தங்கை வீட்டாரிடம் இதுவரை இல்லாத மனஸ்தாபம் ஏற்படலாம். நீங்கள் விட்டுக் கொடுத்தால், அவர்களும் தங்கள் தவறை உணர்ந்து உங்களிடம் நட்பு பாராட்டுவார்கள். அலுவலகத்தில் இதுவரை கிடைக்காத மதிப்பும் மரியாதையும் கூடும். பிள்ளைகள் புரிந்து நடந்து கொள்வார்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டு. காதல் விஷயங்களில் சில தொல்லைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்திற்காக யோகா போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத் தலைவிகள் வீட்டிலிருந்தபடியே சம்பாதித்து குடும்ப வருவாயைப் பெருக்க முயற்சிப்பார்கள். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு மாமியார் வீட்டில் பெரியவர்களின் நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். இது சில முக்கிய முடிவுகள் எடுக்க உதவியாக இருக்கும். அலுவலகத்தில் நினைத்ததை விட சம்பள உயர்வு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். தொழில் சுமூகமாக நடைபெறும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் பொன்னிறம்.
துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு வெளியூர் பயணத்தால் அசதி ஏற்படலாம். சற்று ஓய்வெடுப்பீர்கள். அண்ணன் தம்பி உறவு மேம்படும். அலுவலகத்தில் வேலைப் பளு குறையும். கணவர் வீட்டார் பண உதவி செய்வார்கள். அண்டை வீட்டாரிடம் நட்பு பலப்படும். கலைஞர்களுக்குப் பாராட்டுகள் குவியும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் ஊதா.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு கணவர் வீட்டாரிடம் நல்லுறவு ஏற்படும். வெளியூர் பயணம் முன்னேற்றத்தைக் கொடுக்கும். மாமியார், மருமகள் உறவு சுமூகமாக இருக்கும். தம்பதிகளின் அன்யோன்யம் அதிகரித்து வெளியூர் சுற்றுலா செல்வார்கள். நிலம், மனை சம்பந்தப்பட்ட பட்டா வேலைகள் முடியும். அலுவலகத்தில் பணம் சீராக வந்து கொண்டிருக்கும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். குடும்பத் தலைவிகள் ஆடை ஆபரணச் சேர்க்கை செய்வார்கள். சிலர் புதிய நகை திட்டங்களில் பணத்தைச் சேமிக்கத் தொடங்குவார்கள். தம்பதிகளிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. மருத்துவச் செலவு உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இவர்களது அதிர்ஷ்ட நிறம் நீலம்.
மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு கொடுக்கல் வாங்கல்களில் எச்சரிக்கை தேவை. பெற்றோர்களின் உடல் நலனைக் கவனிப்பது நல்லது. வெளிநாடு சென்ற பிள்ளைகள் உங்களைப் பார்க்க வருவார்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இருவரும் கலந்தாலோசித்து வேலைகளைச் செய்வார்கள். நிலம் சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும். ஆன்மீகப் பணிகள் சிறக்கும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்வார்கள். ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள். வெளிநாடு செல்லத் திட்டமிடுவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டாகும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் வந்தாலும், ஒருவரை ஒருவர் புரிந்து மன்னிப்பு கேட்பார்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு ஆன்மீக யாத்திரை செல்வீர்கள். கமிஷன் துறையினருக்கு லாபம் கிடைக்கும். காதலர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். அலுவலகத்தில் உள்ளவர்கள் பதவி உயர்வு விஷயத்தில் சிறிது அலைந்து திரிய வேண்டியிருக்கும். பெண்களுக்கு நல்ல வரன் அமையும். உடல் நலம் நன்றாக இருக்கும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
{{comments.comment}}