மே 26, 2025...இன்று அதிர்ஷ்டத்தை பெறப் போகும் ராசிகள்

May 26, 2025,10:37 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு மே 26 ம் தேதி, திங்கட்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், வைகாசி 12 ம் தேதி திங்கட்கிழமை

அமாவாசை, கிருத்திகை. காலை 11.30 வரை சதுர்த்தசி திதியும், பிறகு அமாவாசை திதியும் உள்ளது. இன்று காலை 11. 31 மணி துவங்கி, மே 27ம் தேதி காலை 09.09 வரை அமாவாசை திதி உள்ளது. காலை 07.36 வரை பரணி நட்சத்திரம், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 07.36 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 06.30 முதல் 07.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : 09.30 முதல் 10.30 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


சந்திராஷ்டமம் -  அஸ்தம், சித்திரை


இன்றைய ராசிபலன் :




மேஷம் - தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். விற்பனையாளர்களுக்கு விற்பனை அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் வருவார்கள். அதனால் லாபம் அதிகரிக்கும்.


ரிஷபம் - குடும்பத்தில் நிம்மதி நிலவும். சொத்து வாங்குவது மற்றும் விற்பது லாபகரமாக இருக்கும். எதிர்பார்த்த ஒன்று கைக்கு கிடைக்கும். வியாபாரத்தில் வேலை செய்பவர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சி வெற்றி கொடுக்கும். காதல் வரும். பணம் அதிகமாக வரும். 


மிதுனம் - மனைவி வழி உறவினர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வியாபாரம் நன்றாக நடக்கும். தம்பதிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இன்று நீண்ட தூரம் பயணம் செய்வீர்கள். பிள்ளைகளிடம் படிப்பு பற்றி பேசுவீர்கள். 


கடகம் - வெளிநாட்டிற்கு செல்ல விசா கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பார்கள். வாகனம் பழுதாகும். அதை சரி செய்வீர்கள். மார்க்கெட்டிங் வேலை செய்பவர்களுக்கு புதிய தொடர்புகள் கிடைக்கும். 


சிம்மம் - இளைஞர்களுக்கு திருமண முயற்சிகள் தாமதமாகும். அரசாங்க சம்பந்தப்பட்ட வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயத்தில் நன்மை உண்டு. உடல் நலம் தேறும். நண்பர்கள் ஒன்று சேருவர்.


கன்னி - வியாபாரிகளிடம் விட்டுக் கொடுத்தல் நல்லது. காதல் கசக்கும். முடிவெடுக்கும் போது நிதானமாக இருக்க வேண்டும். வீட்டு வேலைகளில் உங்கள் துணை உங்களுக்கு உதவுவார். தம்பதிகளிடம் ஒற்றுமை வளரும். உங்கள் கணவரின் வேலைக்காக உதவி செய்வீர்கள். 


துலாம் -  இன்று சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. இன்று பல தடைகள் வரலாம். அதனால் புதிய முயற்சிகள் எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும். அதனால் மிகவும் கவனம் தேவை.


விருச்சிகம் - குடும்பத்துடன் வெளியூர்களுக்கு சென்று வருவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். உடல் அழகு பெறும். தலைவலி நீங்கும். சமூகத்தில் மரியாதை கூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிடித்த இடத்திற்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.


தனுசு - காதல் வரும். வீடு கட்டும் முயற்சி வெற்றி பெறும். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள். தயங்கிய காரியத்தை இன்று முடித்து காட்டுவீர்கள். உடல் அழகு பெறும். வேலையில் உங்க தேவைகளை அதிகாரிகள் பூர்த்தி செய்வார்கள்.


மகரம் - வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சிறிய தூரம் பயணம் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி உங்களுக்கு புரியும். வேலையில் வேலை அதிகமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. 


கும்பம் -  பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் உண்டாகும். பார்ட்னரிடம் கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். வீட்டிற்கு நல்ல வேலைக்காரர் கிடைப்பார்கள். உங்கள் துணை உங்களுக்கு உதவியாக இருப்பார். 


மீனம் - வெளியூரிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். நகைக்கடைக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை கூடும். மீடியா துறையினருக்கு மதிப்பு கூடும். சந்தோஷமான நாளாக இருக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். உடல் நலம் தேறும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இன்பத்தில் இணைந்து.. துன்பத்தில் தோள் கொடுத்து.. Happy World Couples day!

news

Grey Divorce on rise: ஐம்பது வயதில் ஆசை மட்டுமில்லீங்க.. இப்பெல்லம் டைவர்ஸும் வருது!

news

அன்புமணி மீது பகிரங்க புகார் வைத்த டாக்டர் ராமதாஸ்.. பாமக எதிர்காலம் என்னாகும்?

news

வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது.. அன்புமணிக்கு தலைமை பண்பு அறவே இல்லை.. டாக்டர் ராமதாஸ்!

news

வைகாசியில் விசேஷங்கள் வைத்திருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி... தங்கம் விலை இன்றும் குறைவு!

news

80களில் பிரபலமான நடிகர் ராஜேஷ் உடல் நலக்குறைவால் காலமானார்..!

news

மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக எம்பிக்கள் தேர்வு.. எடப்பாடி பழனிச்சாமி இன்று முக்கிய ஆலோசனை..!

news

தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்..கமலின் பேச்சுக்கு கன்னட அமைப்புகள் மிரட்டுவதா..சீமான் கண்டனம்

news

வங்கக்கடலில் நிலவிவரும்.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மேலும் வலுவடையும்.. வானிலை மையம் தகவல்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்