தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜூன் 28 ம் தேதி, சனிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஆனி 14ம் தேதி சனிக்கிழமை
பகல் 01.18 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. காலை 10.03 வரை பூசம் நட்சத்திரமும், அதன் பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.55 வரை மரணயோகமும், பிறகு காலை 10.03 வரை சித்தயோகமும், அதற்கு பின் மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
சந்திராஷ்டமம் - மூலம், பூராடம்

மேஷம் - அரசியல்வாதிகளுக்கு நல்ல பெயர் கிடைக்கும். இரும்பு வியாபாரத்தில் லாபம் வரும். முக்கியமானவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். பெண்கள் ஆடம்பர செலவுகளை குறைத்து, தேவையான பொருட்களை மட்டும் வாங்கவும். பணம் அதிகமாக வரும்.
ரிஷபம் - மார்க்கெட்டிங் வேலை செய்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பேசிக்கொண்டே வண்டி ஓட்ட வேண்டாம். உடல் அழகு பெறும். மாணவர்கள் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். அரசியல்வாதிகளுக்கு முக்கியமான பதவி கிடைக்கும்.
மிதுனம் - அரசியல்வாதிகள் எதிர்க் கட்சியினரிடம் அனுசரித்து போகவும். வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு விசா கிடைக்கும். பெண்கள் பேசும்போது கவனமாக இருக்கவும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும்.
கடகம் - பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்குவது நல்லது. அரசு சம்பந்தப்பட்ட வேலைகளில் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
சிம்மம் - பிள்ளைகள் பெற்றோரின் பேச்சை கேட்பார்கள். வாகன செலவு அதிகமாகும். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உடல் வலிமை பெறும்.
கன்னி - வியாபாரிகள் தந்திரமாக வியாபாரம் செய்து லாபம் அடைவார்கள். வேலை செய்பவர்களை சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெற்றோரின் ஆலோசனைக்கு மதிப்பு கொடுங்கள்.
துலாம் - பிள்ளைகள் விளையாட்டில் பரிசு பெற்று பெருமை சேர்ப்பார்கள். எதிரியாக இருந்த ஊழியருக்கு சரியான பாடம் கிடைக்கும். மனைவியிடம் கோபப்பட வேண்டாம். பொறுமையாக இருப்பது நல்லது.
விருச்சிகம் - பங்கு சந்தையில் கவனமாக ஈடுபடவும். மனைவி வழி உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வீர்கள். நண்பர்கள் உதவி செய்வார்கள். வேலை செய்பவர்களுக்கு கீழ் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
தனுசு - இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமான விஷயமாக இருந்தால் மட்டும் பயணம் செய்யுங்கள். புதிய முயற்சிகள் வேண்டாம். கடவுளை பிரார்த்தனை செய்வது நல்லது. யாரிடமும் சண்டை போட வேண்டாம்.
மகரம் - தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் கீழ்படிந்து நடப்பார்கள். தியானம் செய்யுங்கள். இரவில் தூர பயணம் செய்ய வேண்டாம். வியாபாரிகளிடம் வியாபார நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
கும்பம் - வீட்டில் வேலை செய்பவர்களிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுங்கள். சமூக சேவகர்கள் மேடையில் ஆவேசமாக பேச வேண்டாம். உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளுங்கள்.
மீனம் - இளைஞர்களுக்கு திருமணம் தாமதமாகும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவி தவறுகளை சுட்டிக்காட்டினால் கோபப்படாமல் அமைதியாக இருங்கள். மாணவர்களுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3
தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!
பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...
பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!
{{comments.comment}}