தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 30 ம் தேதி, வியாழக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், தை 17 ம் தேதி வியாழக்கிழமை
சந்திர தரிசனம். மாலை 06.06 வரை பிரதமை, பிறகு துவிதியை. காலை 08.59 வரை திருவோணம் நட்சத்திரமும், பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் : காலை 11.30 முதல் பகல் 12 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
சந்திராஷ்டமம் - திருவாதிரை, புனர்பூசம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிலுவையில் இருந்த பணத்தை வசூலிப்பதில் இருந்த சிக்கல்கள் தீரும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உயர்கல்வி முயற்சிகள் வெற்றி அடையும்.
ரிஷபம் - சுமாரான நாளாக இருக்கும். அரசு தொடர்பான பணிகள் சாதகமாகும். வேலையில் மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு பெரிய இடத்தில் இருந்து வாய்ப்பு வரும். உடல் நலனில் அக்கறை தேவை.
மிதுனம் - வியாபாரத்தில் மாற்றங்கள் செய்வீர்கள். மாணவர்களின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் நல்ல மதிப்பு கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.
கடகம் - எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும். முக்கிய பணிகளை தவிர்ப்பது நல்லது. இறை வழிபாட்டின் மூலம் நிம்மதி காண வேண்டிய நாள். வார்த்தைகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேவையற்ற பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ள வேண்டி இருக்கும்.
சிம்மம் - முக்கிய ஆவணங்களை கையாளும் போது கவனம் தேவை. வாகன பயணத்தில் கவனம் அவசியம். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதமாக முடியும். சில புதிய பொறுப்புகள் தேடி வரும். அதனால் வேலைச்சுமை அதிகரிக்கும்.
கன்னி - தடைபட்ட காரியங்கள் நல்ல விதமாக முடியும். வெளியூர் பயண வாய்ப்புகள் ஏற்படலாம். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொலைப்பேசி தகவல்கள் நல்ல தகவல்களை கொண்டு வரும்.
துலாம் - எதிரிகள் தொல்லை நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன்களை தரும். அரசு தொடர்பான விஷயங்களில் ஆனுகூலம் ஏற்படும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம் - வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும். பெரியவர்களை கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். முன் கோபத்தை தவிர்க்க வேண்டும்.
தனுசு - நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க் வேண்டும். வாழ்க்கை துணையிடம் அனுசரித்து செல்ல வேண்டும். ஆன்மிக காரியங்களுக்கு உதவுவீர்கள்.
மகரம் - பிள்ளைகள் பாராட்டுக்களை பெறுவார்கள். வீட்டில் சுப காரிய பேச்சுக்கள் நடைபெறும். எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உதவிகள் கிடைக்கும். வீடு, மனை யோகம் அமையும்.
கும்பம் - வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல்நலன் பாதிக்கப்படலாம். கலைஞர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சொத்து சிக்கல்கள் சுமூகமாக முடியும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதால் சேமிப்புகளை உயர்த்த முயற்சி செய்வீர்கள்.
மீனம் - கூட்டாளிகளிடம் இருந்த மனக்கசப்பு நீங்கும். எதிர்காலத்திற்கு என்று சேமிக்க முயற்சி செய்வீர்கள். முயற்சிகளில் வெற்றி அடைய கூடுதலாக சிரமப்பட வேண்டி இருக்கும். உடலில் உஷ்ணம் தொடர்பான பாதிப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!
கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!
கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!
கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு
பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!
கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி
பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்
தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!
{{comments.comment}}