பிரதோஷ தினம் இன்று.. மார்ச் 11ஆம் தேதி, 2025 மாசி மாதம் 27 செவ்வாய்க்கிழமை வளர்பிறை திரயோதசி திதி அன்று பிரதோஷ நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. பிரதோஷ வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான நிகழ்வாகும்.
இந்நாளில் சிவபெருமானையும், நந்திகேஸ்வரரையும் வழிபட்டால் அனைத்து பலன்களும், வளங்களும், நலங்களும் கிடைக்கும்
பிரதோஷம் என்பது சூரிய அஸ்தமனத்திற்கு 1.5 மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் வரும் மூன்று மணி நேரம் மங்களகரமான காலமாகும். ஒரு மாதத்தில் இரண்டு பிரதோஷங்கள்- ஒன்று வளர்பிறை பிரதோஷம் ,மற்றொன்று தேய்பிறை பிரதோஷம் ஆகும்.

இன்று மாலை நாலு முப்பது மணி முதல் 6 மணி வரை பிரதோஷமாக கருதப்படுகிறது. சமஸ்கிருதத்தில் 'ப்ர' என்றால் என்றால் நீக்குபவர் என்றும் தோஷம் என்றால் பாவம் ,தோஷம், கர்மா ,சர்வ தோஷங்களை நீக்குபவர் என்பது அர்த்தமாகும்.
ஒவ்வொரு மாதமும் திரயோதசி திதியில் வரும் மாலை நேரம் பிரதோஷ காலமாக வழிபாடு செய்யப்படுகிறது. சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது .உலக நன்மைக்காக ஆலகால விஷத்தை வலம்புரி சங்கில் அடக்கி ,அதை தானே பருகினார் சிவபெருமான் .அதற்காக நன்றி செலுத்தும் வகையில் தேவர்கள் சிவபெருமானை வழிபட்ட நேரமே பிரதோஷ தினம்.
கோவில்களில் மாலை அந்தி நேரத்தில் திரையோதசி திதி இருக்கும் நாளில் சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு பூஜை , அபிஷேகம் தீப தூப ஆராதனை, நடைபெறும். இந்நாளில் நந்திகேஸ்வரரின் இரு கொம்புகளுக்கு இடையில் சிவபெருமான் திரு நடனம் புரிவதாக ஐதீகம்.
சிவாலயம் செல்பவர்கள் அபிஷேகப் பொருட்கள் வாங்கி செல்வது அதீத நன்மை பயக்கும் .
நெய் அபிஷேகம் செய்வதினால் முக்தி பேறு கிட்டும்.
பழங்கள் அபிஷேகம் செய்வதினால் விளைச்சல் பெருகும்.
பால் அபிஷேகம் செய்வதினால் நோய் தீரும்.
தயிர் அபிஷேகம் செய்வதினால் வளம் உண்டாகும்.
தேன் அபிஷேகம் செய்வதினால் இனிய சரீரம் கிட்டும்.
இளநீர் அபிஷேகம் செய்வதினால் நல்ல மக்கள் பேறு கிட்டும்.
பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்வதினால் செல்வம் பெருகும்.
மலர்கள் அபிஷேகம் செய்வதினால் தெய்வ தரிசனம் கிட்டும்.
சந்தனம் அபிஷேகம் செய்வதினால் சிறப்பான சக்தி உண்டாகும்.
சர்க்கரை அபிஷேகம் செய்வதினால் எதிர்ப்புகள் மறையும்.
நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வதினால் சுகவாழ்வு கிட்டும்.
பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுவதால் பிரதோஷ வழிபாடு அதீத மகிமை உடையதாகும். இந்த வழிபாட்டினால் துன்பங்கள் நீங்கி செல்வங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் ஆன்மீக தகவலுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன்.. உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்
ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!
ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!
புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?
Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!
{{comments.comment}}