சென்னை : முருகப் பெருமான் அவதரித்தது வைகாசி மாதம் விசாகம் நட்சத்தரத்தில் என புராணங்கள் சொல்கின்றன. இதனால் இது முருகப் பெருமானுக்குரிய தினமாக கருதி வைகாசி விசாகம் பெருவிழாவாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பால் குடம் ஏந்தியும், காவடி எடுத்தும் வந்து நேரத்திக்கடன் நிறைவேற்றுவார்கள். வைகாசி விசாகம் அன்று, சிவ பெருமானின் நெற்றிக் கணக்கில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியில் இருந்து உதித்த முருகப் பெருமானின் மனம் குளிர பால் அபிஷேகம் செய்வதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
இந்த ஆண்டு ஜூன் 09ம் தேதி திங்கட்கிழமையான இன்று வைகாசி விசாகம் அமைந்துள்ளது. ஜூன் 08ம் தேதி பகல் 2 மணிக்கே விசாகம் நட்சத்திரம் துவங்கி, ஜூன் 09ம் தேதி மாலை 04.40 மணி வரை மட்டுமே உள்ளது. வழக்கமாக வைகாசி மாதத்தில் விசாகம் நட்சத்திரமும் பெளர்ணமியும் இணைந்து வரும் நாளில் தான் வைகாசி விசாகம் கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு விசாகம் நட்சத்திரம் ஜூன் 09ம் தேதியும், பெளர்ணமி திதி ஜூன் 10ம் தேதி வருகிறது. இதனால் முருகப் பெருமான் அவதரித்த விசாகம் நட்சத்திரம் வரும் ஜூன் 09ம் தேதியையே வைகாசி விசாகம் நாளாக கொண்டாடுகிறோம்.
வைகாசி விசாகம் அன்று மாலை 04.40 மணியுடன் விசாகம் நட்சத்திரம் முடிந்து விடும் என்பதால் காலையிலேயே முருகப் பெருமான் வழிபாட்டினை செய்வது விசேஷம். வீட்டில் முருகப் பெருமான் விக்ரஹம் அல்லது வேல் வைத்திருப்பவர்கள் பால், பன்னீர், சந்தனம், தேன் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யலாம். அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் பாலை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். இந்த நாளில் முருகப் பெருமானுக்கு ஏதாவது இனிப்பு நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.
சர்க்கரை பொங்கல், அப்பம், தேன், திணை மாவு ஆகியவற்றை நைவேத்தியம் செய்யலாம். அதை விட முக்கியமாக முருகப் பெருமானுக்கு மிகவும் பிரியமான ஒரு பொருளை நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் நாம் முருகப் பெருமானிடம் வைக்கும் வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறும். வைகாசி விசாகம் அன்று வெல்லம் வாங்கி வந்து, அதில் முருகப் பெருமானுக்கு பஞ்சாமிர்தம் படைத்து வழிபட வேண்டும். இது முருகப் பெருமானுக்கு மிக மிக பிடித்த பிரசாதம் ஆகும். பஞ்சாமிர்தம் படைத்து வழிபடுபவர்களின் வாழ்க்கையை இனிமையாக முருகப் பெருமான் மாற்றி அருள்வார் என்பது நம்பிக்கை.
Chennai Metro: மெட்ரோ கார்டிற்கு இன்றுடன் டாட்டா.. சிங்காரச் சென்னை அட்டைக்கு வெல்கம்!
சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்ட கவினின் உடல்... நேரில் அஞ்சலி செலுத்த வந்த அரசியல் தலைவர்கள்!
எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதத்தால்.. ஓபிஎஸ்ஸை இழக்கும் பாஜக.. ஆட்டம் காணுகிறதா கூட்டணி?
6 மாவட்டங்களில் இன்றும்... 8 மாவட்டங்களில் நாளையும்... கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம்!
கோச்சுக்காதீங்க.. சமாதான முயற்சியில் பாஜக...முடிவில் உறுதியாக இருக்கும் ஓபிஎஸ்.. அடுத்தது என்ன?
10 ஆண்டுகளில் முதல் முறையாக... சென்னை மெட்ரோ ரயிலில்... ஜூலை மாதத்தில் 1 கோடி பேர் பயணம்!
முதல்வரை சந்திக்க நான் நேரம் கேட்டேனா.. யார் சொன்னது?.. டாக்டர் ராமதாஸ் மறுப்பு
பாஜக.,வுடன் கூட்டணியா?.. வாய்ப்பில்ல ராஜா.. வாய்ப்பே இல்லை.. வைகோ பளிச் பதில்!
யுபிஐ-யில் யாருக்காவது பணம் அனுப்பப் போறீங்களா.. முதல்ல இதைப் படிச்சுட்டுப் proceed பண்ணுங்க!
{{comments.comment}}