பொதுவாக செல்போன்கள் ஆபத்துக் காலத்தில் யாரேனும் உதவிக்கு அழைக்கவும், மெசேஜ்களை அனுப்பவும், தகவல்களை பெறவும், மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் தற்போது செல்போன் என்பது, ஸ்மார்ட் போனாக மாறி, பொழுதுபோக்கு அம்சமாகவும் மாறி விட்டது.
நவீனமயமான காலகட்டத்தில் தற்போது ஸ்மார்ட் போன் என்பது அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. முன்பெல்லாம் உணவு, உடை, இருப்பிடம், என்பதுதான் அத்யாவசிய பொருட்களாக இருந்தது. அதனுடன் தற்போது உள்ள காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோனையும் சேர்த்து விட வேண்டும். சாப்பாடு இல்லை என்றாலும் கூட போன் இல்லாமல் எத்தனை பேரால் இருக்க முடியும். முன்னொரு காலத்தில் மக்களின் பொழுதுபோக்கு என்றால் புத்தகம் படிப்பது, செய்தி வாசிப்பது, நூலகம் செல்வது, இப்படி பல நல்ல பழக்கங்களை கடைபிடித்தனர். ஆனால் இப்ப உள்ள ஜெனரேஷன் மக்கள் பொழுதுபோக்கு என்றாலே ஒரு நாளில் பெரும்பாலான நேரத்தை ஸ்மார்ட் போனில் தான் செலவிடுகின்றனர்.

குறிப்பாக நம் நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஸ்மார்ட் ஃபோன்களின் ஆதிக்கம் அதிகரித்து நம் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எவ்வளவுதான் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தினாலும் ஸ்மார்ட் ஃபோன்களின் பயன்பாடு என்பது குறையாது. மாறாக கட்டணங்கள் உயர்கிறது என்பதற்காக ஸ்மார்ட் போன் வேண்டாம் என தூக்கியா போடுகிறார்கள். இல்லையே! எவ்வளவு உயர்ந்தாலும் ரீசார்ஜ் செய்து ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்தி தான் வருகின்றனர். அந்த அளவிற்கு மனிதர்களிடம் ஸ்மார்ட்போன் தேவை அதிகரித்து விட்டது. அதற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி விட்டனர் என்று சொல்லுவது தான் சரி.
அப்படி ஸ்மார்ட் போன்களால் பொதுமக்கள் அதிகம் அடிமையான நாடுகளை லிஸ்ட் போட்டுப் பார்த்தால் மலைப்பாக வருகிறது. ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்தும் 24 நாடுகள் லிஸ்ட் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் எந்த நாடு முதலிடம் பிடித்துள்ளது.. இதில் இந்தியாவுக்கு எத்தனாவது இடம்.. என்பது.. இதுகுறித்த பட்டியல் தான் தற்போது வெளியாகியுள்ளன. எந்த நாட்டில் மக்கள் அதிகம் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்தி வருகின்றனர்.. எத்தனை பேர் மொபைல் ஃபோன்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறித்த ஆய்வுகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்த விபரங்களை மெக்கில் பல்கலைக்கழகம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி சீனா முதல் இடத்தையும், சவுதி அரேபியா இரண்டாவது இடத்தையும், மலேசியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. பிரேசில், தென்கொரியா, ஈரான், கனடா, துருக்கி, எகிப்து, நேபால், இத்தாலி ஆகியவை அடுத்தடுத்து இடங்களை பிடித்துள்ளன. ஆஸ்திரேலியா பத்தாது இடத்தை பிடித்துள்ளது.
என்னங்க பார்க்கறீங்க.. நம்ம நாட்டைக் காணோம்னுதானே. பயப்படாதீங்க.. நாமளும் இருக்கோம்.. அதாவது 17வது இடத்தில்தான் நாம இருக்கோம்.. நாம இன்னும் பெரிய அளவுக்கு அடிமையாகலை. அதனால் இந்த லிஸ்ட்டில் டாப் ஸ்லாட்டுகளில் நாம் இல்லை. அதேசமயம், அதிக அளவில் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா உலக அளவில் 2வது இடத்தில் இருக்கிறது. முதலிடம் சீனாவுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
தவெகவை முடக்க முயற்சிக்கிறார்கள்... எங்களுக்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது... சிடிஆர் நிர்மல்
ICC ODI ranking: ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில்.. ரோஹித் சர்மா புதிய சாதனை!
வைரலானது.. ஜப்பானின் முதல் பெண் பிரதமரின் கைப்பை.. உள்ளூர் நிறுவனத்திற்கு கிராக்கி!
{{comments.comment}}