அப்பாடா ஒரு வழியாக ரிலீஸாகப் போகுது.. பிரஷாந்த் நடித்த அந்தகன்.. ஆகஸ்ட்டில் வருகிறதாம்!

Jul 13, 2024,04:04 PM IST

சென்னை: பிரபல நடிகர் பிரஷாந்த்தின் நடிப்பில் உருவாகியுள்ள படம்  அந்தகன். இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 


1990ம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரசாந்த். 90களில் டாப் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வந்த நாயகன். 1996ம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான கல்லூரி வாசல்  என்ற படம் மெகா ஹிட் அடித்தது. அதன்பின்னர் வெளியான ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, குட்லக், பார்த்தேன் ரசித்தேன், பிரியாத வரம் வேண்டும், மஜ்னு உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. இதனால் டாப் நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தார் பிரசாந்த். சில ஆண்டுகள்  சினிமாவின் பக்கம் வராமல் இருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு, பிரசாந்த் விஜய்யுடன் சேர்ந்து தி கோட் படம் நடித்துள்ளார்.




இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு அஸ்திவாரம் போடப்பட்ட அந்தகன் திரைப்படம் சமீபத்தில் வெளியாக உள்ளது. இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற அந்தாதூன் படத்தை தமிழில் ரீமேக்கின் மூலம் வெளியாகும் படம் தான் அந்தகன். இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன்  தயாரித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இமையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக ரவியாதவ், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளானர்.


இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். நாயகியாக ப்ரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், பல்வேறு காரணங்களால் படம் வெளிவராமல் உள்ளது. இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளிவந்த பின்னர் பிரசாத் விஜய்யுடன் இணைந்து நடித்த தி கோட் செப்டம்பர் மாதம் வெளியாகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு தலைகுனியாது.. 234 தொகுதிகளிலும்.. பிரச்சாரத்தைத் தொடங்கும் திமுக

news

விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்

news

ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு

news

திமுக - அதிமுக ஜல்லிக்கட்டு.. எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட 2 முக்கிய அறிவிப்புகள்!

news

கல்விக்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்ன ஆனது? திமுக அரசிற்கு ராமதாஸ் கேள்வி!

news

மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி

news

பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

news

மக்கள் பாதுகாப்பைப் பறிக்கும் திமுக அரசின் முடிவுகாலம் வெகு தொலைவிலில்லை: நயினார் நாகேந்திரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்