தவ யோகி விவேகானந்தரும், தமிழ்ப் பெரும் புலவர் திருவள்ளுவரும்.. கன்னியாகுமரியின் இரு கண்கள்..!

May 30, 2024,09:48 PM IST
நாகர்கோவில்:   கன்னியாகுமரிக்கு வருவோர் கட்டாயம் பார்த்தே ஆக வேண்டிய இரு இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்குப் போகாவிட்டால் அவர்களது கன்னியாகுமரி பயணம் கண்டிப்பாக நிறைவு பெறாது.

தமிழ்நாட்டின் தென் கோடி முனைதான் கன்னியாகுமரி. அதற்கும் அப்பால் ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்தது. அது கடலுக்கு அடியில் போய் விட்டதாக நம்பப்படுகிறது. அதை லெமூரியா கண்டம் என்றும் அழைக்கிறார்கள்.  தமிழர்களின் கலாச்சாரம், நாகரீகம் அங்கு தழைத்தோங்கி, செழித்து விளங்கியதாகவும் நம்பப்படுகிறது.

வங்கக் கடல், அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று பெரும் சமுத்திரங்களும் சங்கமிப்பது இங்குதான். இந்தியாவின் தென் கோடி எல்லையும் குமரிதான். கேப் கொமரின் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட குமரி முனை வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் மிக முக்கியமான ஊராகும்.  மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது கன்னியாகுமரி.



பழமை வாய்ந்த தேவாலயங்கள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள், அழகான கடற்கரை, அட்டகாசமான சூரிய உதயம் வரிசையில் முக்கிமயான இன்னும் இரு விஷயங்கள் - விவேகானந்தர் நினைவு தியான மண்டபம் மற்றும் அய்யன் திருவள்ளுவர் சிலை.

குமரி முனையில் கடற்கரையிலிருந்து சற்று தள்ளி கடலில் இரண்டு பிரமாண்ட பாறைகள் உள்ளன. அதில் ஒன்றில்தான் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. மற்றொரு பாறையில் பிரமாண்ட திருவள்ளுவர் சிலை உள்ளது. இரண்டும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. 

1892ம் ஆண்டு விவேகானந்தர் குமரி முனைக்கு வந்தார். இப்போது மண்டபம் அமைந்துள்ள பாறையில்தான் அவர் டிசம்பர் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்கள் தியானம் மேற்கொண்டார். இந்தப் பாறைக்கு ஸ்ரீபாத பாறை என்றும் பெயரிட்டுள்ளனர். இங்கு மேற்கொண்ட தியானத்தால்தான் அவருக்குள் பெரும் எழுச்சியும், ஞானமும் பிறந்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் இந்தப் பாறை பிரபலமானது, இங்கு தியான மண்டபமும் அமைக்கப்பட்டது. கன்னியாகுமரிக்கு வருவோர் இங்கும் கட்டாயம் வருவார்கள். தியானம் மேற்கொள்வார்கள்.



இந்த மண்டபத்திற்கு சற்று தொலைவில் கடலில் உள்ள இன்னொரு பாறையில் கம்பீரமாக நிற்கிறார் நமது தமிழ்ப் புலவர் திருவள்ளுவனார். 2000மாவது ஆண்டு ஜனவரி 1ம் தேதி இந்த சிலை திறக்கப்பட்டது. மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்டு பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட திருவள்ளுவரின் சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது. பீடம் மற்றும் சிலையின் உயரம் மொத்தம் 133 அடியாகும். அதாவது 133 அத்தியாயங்களைக் குறிக்கும் வகையில் இந்த உயரம் திட்டமிடப்பட்டது. முழுமையாக இந்திய கட்டடக் கலை பாணியில் உருவாக்கப்பட்ட சிலை இது. குமரிக்கு வருவோர் தவறாமல் செல்லும் இடமாக திருவள்ளுவர் சிலையும் ஒன்று.

தமிழ்நாட்டின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் கன்னியாகுமரிக்கு தனி இடம் உண்டு. இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, பல நாட்டுக்காரர்களும் இங்கு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்