விறுவிறுப்புக்கு.. பரபரப்புக்கு மத்தியில்.. வித்தியாசமான "கடைசி தோட்டா".. ஹீரோ யார் தெரியுமா?

Mar 27, 2024,03:43 PM IST

சென்னை:  விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் உருவாகியுள்ள கடைசி தோட்டா படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாம். இதனால் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம்.


ஆர்.வி.ஆர் ஸ்டுடியோ சார்பில் ஆர்.சுவாமிநாதன் தயாரிப்பில், நவீன் குமார் இயக்கத்தில்  உருவாக்கியுள்ளது கடைசி தோட்டா திரைப்படம். மோகன் குமார் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்திற்கு லோகேஸ்வரன் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். வி.ஆர் சுவாமிநாதன் இசையில் இப்படத்தில் இரண்டு பாடல்களை சினேகன் எழுதி உள்ளார். 




இப்படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்துள்ளதாம். மேலும் இப்படம் ஒரு நாளில் ஒரு நடக்கக்கூடிய மர்மங்கள் நிறைந்த கிரைம் திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ளதாம். 


இதில் ராதாரவி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாகவும், வனிதா விஜயகுமார் அசிஸ்டன்ட் போலீஸ் கமிஷனர் ஆகவும் நடித்திருக்கிறார்கள். ராதாரவியை இதுவரை யாரும் யாரும் பார்த்திராத மாடலான, ஸ்டைலிஷ் ஆன கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளாராம். அதேபோல் வனிதா விஜயகுமாரும் அதிரடியான போலீஸ் கெட்டப்பில் நடித்து அசத்தியுள்ளாராம். இவர்களுடன் குடும்பத் தலைவராக ஸ்ரீ குமார், நகைச்சுவை பகுதியை பட்டையை கிளப்பும் வையாபுரி ஆகியோர் நடித்துள்ளனர்.




இந்த நிலையில் கடைசி தோட்டா படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியானது. இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று சோசியல் மீடியாவில் வைரலானது. இதைத் தொடர்ந்து படத்தில் அமைந்துள்ள பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கிரைம், திரில்லராக உருவாகியுள்ள கடைசி தோட்டா படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்