சென்னை: சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
தமிழ் திரையுலகின் உச்ச நடிகராக இருந்த நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதன் பின்னர் கட்சியின் வளர்ச்சிப் பணிகளை ஒவ்வொன்றாக செய்து வந்தார். கட்சி பாடல், கட்சி கொடியை அறிமுகம் செய்தார். அதனை தொடர்ந்து விக்கிரவாண்டி வி.சாலையில் கடந்த அக்டோபர் மாதம் விஜய் கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் வரலாறு காணாத கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் விஜய் பெரியளவில் ஒன்றும் பேச மாட்டார் என்று பல்வேறு கட்சியினரும் எதிர்பார்த்து இருந்த வேலையில், அந்த மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. அதுமட்டும் இன்றி என்னோட கெரியரின் உச்சத்தை உதறிவிட்டு அந்த ஊதியத்தை உதறிவிட்டு, உங்கள் விஜயாக... உங்களை மட்டும் நம்பி வந்திருக்கேன் என்று தவெக மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பேசியது அவரது ரசிகர்களையும், தவெக தொண்டர்களையும் நெகிழ வைத்தது என்றே சொல்லலாம்.

இந்த மாநாட்டில் விஜய்யின் அனல் பறந்த பேச்சு பல மாதங்களாக பல்வேறு கட்சியினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.அந்த மாநாட்டில் கூடிய கூட்டமும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், விஜய்யின் தவெக கட்சி தொடங்கி ஓராண்டு நிறை பெற இருக்கும் தருவாயில், கட்சிக்கு இதுவரை மாவட்ட செயலாளர்கள் யாரும் நியமிக்கப்படாமலேயே இருந்து வந்தது. விஜய் நடிகராக இருந்த போது அவரது மக்கள் இயக்கத்தில் பொறுப்பு வகித்தவர்களே தற்போது வரை மாவட்ட தலைவர்களாக இருந்து வருகின்றனர். எனவே கட்சிக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க எண்ணிய விஜய் கடந்த சில மாதங்களாகவே அது தொடர்பான பணிகளை செய்து வந்தார்.
இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை ஜனவரி 10ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்டத் தலைவர்கள் மற்றும் அணி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பழனி முருகன் கோவிலில் போராட்டம்: ஹெச். ராஜா உட்பட 12 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
நம்பிக்கை.. ஆன்மாவின் மெளன வெளிச்சம்!
2026 சட்டசபை தேர்தல்... யாருடன் கூட்டணி?... மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!
தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள் அறிவிப்பு
தமிழர்களின் குரலை அடக்க முடியாது...ஜனநாயகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் காந்தி
புதுசு புதுசா யோசிக்கிறாங்களே...சீனாவில் உயிருடன் இருப்பதை அப்டேட் செய்ய புதிய "ஆப்"
சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம்...ஏற்பாடுகள் தயார்
பிரதமர் மோடியின் மதுரை பொதுக்கூட்டம்... திடீர் என சென்னைக்கு மாற்றம்!
பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
{{comments.comment}}